இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். அளவான இனிப்புக்கு அதிக நன்மை உண்டு. அளவுக்கு அதிகமான இனிப்பினால் தீமைதான் அதிகம்.
இனிப்புச் சுவை உடலை வளர்க்கும். உடல் எடையைக் கூட்டும். அதிக அளவில் இனிப்பு உண்பவர்கள் உடல் பருத்துக் காணப்படுவார்கள். இனிப்புச் சுவை நீரிழிவு நோய் உள்ளவர்களைத் தாக்கும். உடலில் அதிக அளவு சர்க்கரைச் சத்து இருந்தால் புண்கள் விரைவில் ஆறமாட்டா.
கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை முதலியன முக்கிய உணவாகக் கொண்டவர்க்கு அதிக தசை வளர்ச்சி இருந்தாலும் துன்பம் உண்டாவதில்லை. அரிசி மட்டும் உணவாகக் கொண்டவர்க்குத் தசை வளர்ச்சி மிகவும் துன்பம் தருகிறது. இவர்கள் உடல் சுமையால் நடக்கவும் மிகுந்த துன்பம் உண்டாகிறது.
உடலுக்கேற்ற எளிய உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மட்டும் உணவு மாற்றத்தால் பருமனாயிருப்பவர் ஒல்லியாகலாம்.
சர்க்கரை, கற்கண்டு, வெல்லம், நாட்டுச் சர்க்கரை, கரும்பு, வாழைப்பழம், கமலாப்பழம், சாத்துக்குடிப்பழம், அன்னாசிப்பழம், களாப்பழம், பேரீச்சம்பழம், நாவற்பழம், இலந்தைபழம், சீதாப்பழம், மாதுளம்பழம் போன்றவற்றில் இனிப்புச்சுவை அதிகம் உண்டு.
நன்றி : வேலூர் மா.குணசேகரன்
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.