உடல் பருமன் குறித்த பிரதமர் மோடியின் ஆலோசனை

உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்திற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்பட 10 பேரை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.

நேற்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் உடல் பருமன் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: இன்று எட்டில் ஒருவர், உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுகிறார் என, ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதில் கவலையளிக்கும் விஷயம், குழந்தைகளிடம் இந்த பிரச்னை அதிகரித்துள்ளது தான். உடல் பருமன், பல வகையான நோய்களை, பிரச்னைகளை உருவாக்குகிறது. உங்களுடைய உணவில் பயன்படுத்தும் எண்ணெயில், 10 சதவீதத்தை குறையுங்கள்.

அதுபோல, உணவுக்கான எண்ணெய் வாங்கும்போதே, 10 சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு படிப்படியாக இதை அதிகரித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எண்ணெயை குறைக்கும் அதே நேரத்தில், 10 பேரிடமும் இது போன்ற சவாலை முன்வையுங்கள். இதனால், உடல் பருமன் பிரச்னையில் இருந்து விடுபட முடியும், இவ்வாறு அவர் பேசினார்.

‘கும்பமேளாவை இழிவுபடுத்துவோர் அடிமை மனநிலை உடையவர்கள்’ பிரதமர் மோடி கடும் விமர்சனம்
இந்த நிலையில், உடல் பருமனுக்கு எதிரான பிரசாரம் செய்யவும், எண்ணெய் கலந்த உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிரதமர் மோடி, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என 10 பேரின் பெயரை தேர்வு செய்துள்ளார்.

தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா, போஜ்புரி நடிகர் நிராஹுவா ஹிந்துஸ்தானி, துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, நடிகர் மோகன்லால், தொழிலதிபர் நந்தன் நிலேகனி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, நடிகர் மாதவன், பாடகி ஸ்ரேயா கோஷல், ராஜ்யசபா எம்.பி., சுதா மூர்த்தி ஆகியோரின் பெயர்களை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.

இந்த விழிப்புணர்வு இயக்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, தான் தேர்வு செய்தவர்களும் தலா 10 பேருக்கு இந்த சவாலை விடுக்கும்படி பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

புதல்வருக்கு மட்டுமே முதல்வர் � ...

புதல்வருக்கு மட்டுமே முதல்வர் கனவு இருக்க வேண்டுமா – தமிழிசை கேள்வி வைகோ போன்றோர் ஈழப் பிரச்னை நடந்தபோது ஒரு மாதிரி ...

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் � ...

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ''ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை'' என்று மத்திய அமைச்சர் ...

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணை� ...

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணையை சுக்குநூறாக்கியது இந்தியா பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா ...

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப ...

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு டில்லியில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ...

மிகவும் துல்லியமான தாக்குதல் R ...

மிகவும் துல்லியமான தாக்குதல் – சசி தரூர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி ...

பயங்கரவாதிகளின் முகாம்களை நிர� ...

பயங்கரவாதிகளின் முகாம்களை நிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பயங்கரவாதிகளின்முகாம்களைநிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...