நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் . இதை, 'கடவுளர்களின் மருந்து' என்று குறிப்பிடுவது உண்டு . பச்சையாக இருக்குறப்போ சகிக்க முடியாத இதனோட வாசனை, சமையல்ல சேர்த்த பிறகு ஆளை அசத்தும். ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகலில்தான் பெருங்காய செடி வளருது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த
உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதுல வழியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காயவைச்சா, அதுதான் பெருங்காயம். பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம்னு இதுல ரெண்டு வகை இருக்குது.
காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும்
குணம் கொண்டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்துல செரிக்க வைக்கும். வாயுக்கோளாறை விரைவிலேயே சரிசெய்யும் மருந்து இது. தசைகளுக்கு பலம் கொடுக்கும், சீறுநீரோட அளவைப் பெருக்கும்னு ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருக்கு. தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா, வயிற்று வலி, வயிறு உப்புசமாக இருக்குறது போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.
பெருங்காயம் , பெருங்காயத்தூள், பெருங்காயத்தை, பெருங்காய டப்பா
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.