அவக்கேடோவின் மருத்துவக் குணம்

avacotaஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் உருண்டைவடிவில் சதைப்பற்றோடு காணப்படும். ஒரு பெரிய விதையைச்சுற்றி வெண்ணெய் போன்ற சதைப்பகுதியுடன் தோல் கடினமாக இருக்கும். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருந்து கருஞ்சிவப்பு வரையான நிறம் கொண்டது.

கடுமையான சீரணக் கோளாறுகளில் பரிகாரமாகும் சிறந்த உணவு. வயிற்றில் ஏற்படும் திருகுவலி மற்றும் சீதலத்துக்கு இப்பழத்தின் சாற்றையே சீன மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். குடற்புண்ணுக்கு அவக்கேடோ பழச் சாற்றைத்தான் ஜப்பானியர்கள் பயன்படுத்துகிறார்கள்.

வாய் நாற்றத்தைப் போக்கக் கூடிய மற்ற 'லோஷன்'களை விட பலமடங்கு சிறந்தது. வாய் நாற்றத்துக்கு காரணமான குடல் அழுகல் சமாச்சாரங்களை அகற்றும்.

செதில் போன்று திட்டுத்திட்டாக இருக்கும் சரும நோய்க்கான சிகிச்சையில் அவக்கேடோ எண்ணெயைப் பயன்படுத்தலாம். அவக்கேடோ பழங்கள் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

இதன் எண்ணெய் அழகு சாதனத்தயாரிப்பில் இடம் பெரும் பொடுகைக் கட்டுப்படுத்தும் கண்டிஷனர், சோபை இழந்த தலை முடிக்கு புத்துயிரூட்டும் தைலம், குளியல்தைலம், ஷாம்பு தயாரிப்புகளில் அவக்கேடோ பழஎண்ணெய் பயன்படுகிறது.

முடிந்தவரை பழத்தை அப்படியே சாப்பிட்டு விடுவது நல்லது. சமைத்தால் துவர்க்கும். குளிரில் தாக்குப் பிடிக்காது. பழத்தை அரை வெப்பநிலையில் சில நாள் வைத்திருக்க முடியும். குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.

நன்றி : நரேந்திரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...