கடந்த 2008-ம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியை தொடர்ந்து பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகலும் ஒத்திவைக்கபட்டது .
இது குறித்து எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்;
எம்பிக்களுக்கு பணம் கொடுத்தது இந்திய ஜனநாயகத்திற்கே பெருத்த அவமானம். நேர்மையான பிரதமர் என பெயரெடுத்தவரின் ஆட்சியில் நடைபெற்றுள்ள விவகாரங்கள் எல்லாம் தற்போதுதான் வெளிசத்திற்கு வருகின்றன. 2008ம் ஆண்டில் 3பாஜக உறுப்பினர்கள் லஞ்சப்பணத்தை இதே நாடாளுமன்றத்தில் கொண்டு-வந்து காட்டியபோது அப்போதைய-சபாநயகர் அதை கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு எதிராகவே விசாரணையை நடத்த உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் பதவியில் நீடிக்கும் உரிமையை அரசு இழந்துவிட்டது. எனவே, பிரதமர் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்றார்
{qtube vid:=RRSX8QVKikQ}
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.