ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான பேச்சு, கடந்த 17 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்தது.
ஒரு சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து ஏற்படாததை அடுத்து, 2013ல் இந்த பேச்சு நிறுத்தப்பட்டது. பின், 2022 ஜூனில் மீண்டும் துவங்கியது.
இந்நிலையில், ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இடம் பெற்றுள்ள நாடுகளின் மூத்த தலைவர்களும் அவருடன் வந்தனர்.
இவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் நேற்று சந்தித்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்தனர். அப்போது, இந்தோ- – பசிபிக் பகுதியில் இருவழி ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த தலைவர்கள் முடிவு செய்தனர்.
நெருங்கிய நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா உடன் உள்ள உறவை போல, இந்தியா உடனான ராணுவ உறவை வலுப்படுத்த விரும்புவதாக வான் டெர் லேயன் அப்போது தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி கூறுகையில், ”இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
”இந்த ஆண்டு இறுதியில் இந்தியா தலைமை ஏற்று நடத்தவுள்ள இந்தியா – ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்,” என்றார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |