நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதால், ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் எதிர்க் கட்சியினர் அமளியில் ஈடுபடுவதால், ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன’’ என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

‘நேஷனல் ஹெரால்ட்’ பத்திரிகையை காங்கிரஸ்கட்சி வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைதலைவர் ராகுல் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் தூண்டுதல்தான் காரணம் என்றுகூறி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கடும் அமளியில் ஈடுபட்டுவருகிறது. இதனால் அவை ஒத்திவைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜாக்ரன் செய்திநிறுவனம் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வியாழனன்று பேசினார். அப்போது அவர்  கூறியதாவது:

ஒருவருடைய மனம்போன போக்கில், ஜனநாயகம் செயல்படமுடியாது. நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் மீண்டும் அமளியில் ஈடுபடுகின்றனர். இது கவலையளிக்கிறது. தேர்தல் மற்றும் அரசுடன் மட்டும் ஜனநாயகத்தை வரையறுத்துக் கொள்ளகூடாது. ஜனநாயகத்துக்கு முன்னர் 2 முக்கிய அபாயங்கள் உள்ளன. ஒன்று மன்தந்த்ரா (ஒருவருடைய மனம்போன போக்கில் செயல்படுவது), இன்னொன்று தன்தந்த்ரா (பண பலம்). இதன் படி ஜனநாயகம் செயல்பட முடியாது.

என் மனதில் தோன்றியபடி நான் செயல்படமுடியும். ஆனால், நாடு அப்படி செயல்பட முடியுமா? ஏழைகள் தங்கள் உரிமைகள் கிடைக்காமல் தவிக்கின்றனர். சரக்கு மற்றும் சேவைவரி மசோதா (ஜிஎஸ்டி) மட்டுமல்ல, ஏழைகளுக்கான பல்வேறு நலத்திட்ட மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் முடங்கி கிடக்கின்றன.

ஜிஎஸ்டி.க்கு என்ன வேண்டு மானாலும் ஆகட்டும். அதை எல்லாருடனும் கலந்தாலோசித்து இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கலாம். ஆனால், ஏழைமக்களின் கதி என்ன? நாடாளுமன்றம் செயல்பட முடியாததால் எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றன. குறிப்பாக வேலைசெய்யும் ஏழைகளுக்கு போனஸ் தொகை ரூ.3,500-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தும் சட்டமசோதா தேங்கி கிடக்கிறது.

எனவேதான் நாடாளுமன்றத்தை செயல்படவிடுங்கள் என்று கேட்கிறேன். விவாதம் நடத்தவும், பேச்சு வார்த்தை நடத்தவும், தகவல் பரிமாறவும் நாடாளுமன்றத்தை விட வேறுசிறந்த இடம் இல்லை. ஆனால், நாடாளுமன்றத்தை இல்லாத நிலையாக்கினால், பின்னர் ஜன நாயகம் என்பது கேள்விக் குறிதான். ஜனநாயகத்தின் கவுரத்தை மனதில்கொண்டு, சாதாரண ஏழைமக்களின் நலனுக்கான சட்டங்களை இயற்ற வேண்டும்.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...