மோடியின் ஆட்சி சூப்பர் 54 சதவிதம் பேர் கருத்து

பாஜக  ஆட்சி எவ்வாறு உள்ளது, பிரதமர் மோடியின் செயல் திறன் எப்படி, இன்று தேர்தல் நடந்தால் பாரதீய ஜனதாவின் நிலை என்ன என்பதுகுறித்து எபிபி செய்தி நிறுவனமும், நீல்சன் நிறுவனமும் இணைந்து புதியசர்வே எடுத்துள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளாதாவது:-

ஒன்றரை வருட பாரதீய ஜனதா ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு திறன் குறித்தகேள்விக்கு 54 சதவீதத்திற்கும் மேற்படவர்கள் செயல்திறன் சராசரிக்கும் அதிகம் தான் என்று கூறியுள்ளனர்.

இந்தகேள்விக்கு பதில் அளித்தவர்களில் 17 சதவீதம் பேர்  மிகவும் நன்றாகஇருந்தது என்றும்,37 சதவீதம் பேர் நன்றாக இருந்தது என்றும் 30 சதவீதம்பேர் சராசரியாக இருந்தது என்றும், 11 சதவீதம்பேர் மோசம் என்றும் கூறியுள்ளனர்.

பதில் அளித்தவர்களில் பெரும்பான்மையினர் பாரதீய ஜனதா  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல் பாடுகள் சராசரிக்கும் அதிகம்  இருந்ததாக கூறி உள்ளனர். இந்தசர்வேயின் மூலம்  பாராளுமன்ற தேர்தல் இன்று நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு  இருப்பதாக தெரியவந்துள்ளது.

இன்று தேர்தல் நடந்தால்  தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 301 இடங்கள்கிடைக்கும் என்று  சர்வே மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2014 தேர்தலில்  தேசிய ஜனநாயக கூட்டணி 339 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கூட்டணி (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) கடந்தமுறையை விட இந்தமுறை 62  முதல் 100  இடங்கள் அதிகம்பெறும் என தெரிய வந்துள்ளது. இதுபோல் இடதுசாரிகளின் இடங்களும் இரட்டிப்பாகும்.ஆனால் மற்றய கட்சிகளின்  இடங்கள் வெகுவாக குறையும் என தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் இன்று நடந்தால் பா.,ஜனதா 43 சதவீத ஓட்டுகளும், காங்கிரஸ் 14 சதவீத ஓட்டுகளும், ஆம் ஆத்மி 4 சதவீத ஓட்டுகளும்,  திரிணாமுல் காங்கிரஸ் 3 சதவீத ஓட்டுகளும், ஜனதா தளம் ஒரு சதவீத ஓட்டும் பெறும் என தெரிய வந்துள்ளது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.