ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை

”ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 4.50 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்க முடியும்,” என, மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

முதல் லோக்சபா தேர்தல் 1951 – 1952ல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டன. 1952, 1957, 1962, 1967ல் சட்டசபைக்கும், லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

கடந்த 1971ல் லோக்சபா ஒரு ஆண்டு முன்னதாகவே கலைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சி செய்த கேரளாவில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பை மீறி மாநில அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது.

அவசர நிலையின்போது, காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கடந்த காலத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சியும் இதை தான் செய்தது. லோக்சபா தேர்தல், இப்போது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளால் 45 நாட்கள், மேம்பாடு செயல்முறையை தடுக்கிறது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு ஆறு மாதம் நடக்கிறது. ஒரு மாநிலம் தேர்தலுக்காக நிர்வாக செயல்பாடுகளில் குறைந்தது, ஏழு மாதங்களை இழக்கின்றன.

பல தரப்பினருக்கு ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கவும், அதிக ஓட்டு சதவீதம், கூடுதல் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நிலையான ஜனநாயக அமைப்பு நம்பிக்கைக்காகவும், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்பட்டது.

நிதி ஆயோக் மற்றும் சட்ட ஆணையமும் இந்த திட்டத்தை ஆதரிக்கின்றன. 2019ல் ஒரே நாடு, ஒரே தேர்தலை 16 அரசியல் கட்சிகள் ஆதரித்தன. ஆனால், மூன்று கட்சிகள் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதனால் பணத்தை சேமித்து, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 4.50 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்க முடியும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பொது நலனுக்கான நடவடிக்கையே தவிர, திணிப்பு இல்லை. எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தால் 2034ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி� ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்� ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம� ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்� ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி� ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...