“வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது,” என, திண்டுக்கல்லில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடந்த பா.ஜ., மதுரை பெருங்கோட்ட தொண்டர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில் இரட்டை இலை – தாமரை கூட்டணி உறுதியாகியுள்ளது. இதில் யார் யார் எவ்வளவு பங்கேற்பு என்பது குறித்து நமக்கு தேவையில்லை. பா.ஜ., தொண்டர்கள் சமூக வலைதளங்களில் இதுகுறித்து, எதுவும் பகிரத் தேவையில்லை.
தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில், இன்னும் யாரெல்லாம் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, மத்திய அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவு எடுப்பர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். அதில், பா.ஜ.,வைச் சேர்ந்தோர் அதிகம் பேர் இருப்பர்.
‘மத்திய அரசிடம் இருந்து தமிழகம் அவுட் ஆப் கன்ட்ரோலுக்கு சென்று விட்டது’ என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ஆப் கன்ட்ரோலுக்கு செல்ல வேண்டும் என்பதே, நம் எண்ணமும் செயலுமாக இருக்க வேண்டும். வரும் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்திவிட்டால், இனி தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசியதாவது:
தமிழகத்தில் அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி, 53 சதவீதம் பெறும் என்ற கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. இதனால், திருத்தணியில் பேசும் போது முதல்வர் ஸ்டாலின் தடுமாறினார்.
டாஸ்மாக் ஊழல் நடக்கவில்லை என்றால், 20 நாட்களில் வழக்கை முடியுங்கள் எனச் சொல்லி, அதற்கு தி.மு.க., ஒத்துழைப்பு அளித்திருக்கலாம். அதைவிடுத்து, இழுத்தடிப்பது என்பது, செய்த ஊழல் வெளிவந்துவிடும் என்ற பயம் தான்.
பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராம.சீனிவாசன் பேசியதாவது: மத்திய அரசுக்கு சவால் விட்டதால்தான், முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாமல் போனது.
தற்போது, முதல்வர் ஸ்டாலின் சவால் விட்டுள்ளார். அடுத்து, 200 ஆண்டுகளுக்கு அவரால் ஆட்சிக்கு வர முடியாமல் போய்விடும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |