ராமானுஜர் என்ற மகான் உயர்ந்த அந்தணக் குலத்தில் பிறந்தவர். அவருக்கு அந்தணக் குலத்தில் பிறந்த சீடர்களும் உண்டு. தாழ்ந்த குலம் என்று உலகோர் சொல்லும் குலத்தல் பிறந்த சீடர்களும் உண்டு.
உறங்காவில்லி என்கிற சீடர் வேடுவர் குலத்தில் பிறந்தவர். ராமானுஜர் காவிலி ஆற்றில் குளிக்கப் போகிற போது நடக்க சிரமமாக இருந்தால் பிராமண சீடர்கள் தோளில் கை போட்டுக் கொண்டு நடப்பார். ஆனால் குளித்து விட்டு
கோயிலுக்குப் போகும் போது மறந்தும் அவர்கள் தோளில் கை போட்டு நடக்க மாட்டார்.
தாழ்ந்தப்பட்ட குலத்தைச் சார்நத் உறங்காவில்லி இருந்தால் அவர் தோளில் கை போட்டபடி மகிழ்ச்சியாக நடப்பார். இது அந்தணச் சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. உயர்ந்த ஜாதியான நம் தோளைக் குளிக்கும் முன் தொடுகிறார். குளித்து விட்டு வரும் சமயம் தாழ்த்தப்பட்டவர் தோளைத் தொடுகிறாரே என்று அவர்களுக்கு வருத்தம்.
ஒரு நாள் வேண்டும் என்றே ராமானுஜர் குளித்து விட்டு வரும் சமயம் உறங்காவில்லியை வரவிடாமல் அவர்கள் தடுத்து விட்டனர். பிராமண சீடர்கள் ஓடிப் போய் ராமானுஜருக்குத் தோள் கொடுத்தனர். ராமானுஜர் தம் மேல் துண்டைத் தண்ணீர் நனைத்து ஈராமாக்கி சீடர்கள் தோள் மேல் போட்டு விடு அதன் மீது கை வைத்து நடந்தார். "ஈரத்துணியை ஏன் எங்கள் மேல் போட்டீர்கள்?" என்று கேட்டதும், " உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான்" என்றார். "தாழ்த்தப்பட்ட வில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை. உயர்ந்த பிராமண ஜாதயில் பிறந்த எங்களைத் தொட்டால் தீட்டு வருமா?" என்று குமுறினார்கள்.
"உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்களுக்கு இருக்கிறது. உங்களைத் தொட்டால் அது எனக்கு வந்துவிடும். உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் கிடையாது. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கு அந்த அடக்கம் வரும் அல்லவா? அதனால் தான் அவனைத் தொடும் போது ஈரத்துணியைத் தோளில் போடாது தொடுகிறேன்" என்றார் ராமானுஜர்.
பாறாங்கல்லில் சிற்பி வெட்டி எறிகிற முதல் துண்டு மாதிரி நாம் கடவுளாக, நம்மைச் செதுக்க நாம் வெட்ட வேண்டிய முதல் துண்டு ஜாதித்திமிர்… நான் இன்ன ஜாதி என்கிற அகங்காரத்தில் இருந்து விடுபடுவது நம்மைச் செதுக்கும் முதல் செதுக்கல் …
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.