உலகிலேயே மிகப்பெரிய மீட்ப்பு

உக்கரைனின் கிழக்கே ஒன்றரைலட்சம் ரஷிய துருப்புகள் உள்ளே நுழைந்துவிட்டது. ..!நூற்றுகணக்கான கவசவண்டிகள் குண்டுமழை பொழிய, தலைநகர் கீவ் மேல் லாஞ்சர்கள் பறக்க, ரஷிய தரைப் படையும் நகரில் மார்ச் செய்கிறது.

கிட்டத்தட்ட 20000 இந்தியர்கள் அங்கே அதில் 5000 பேர் இந்தியஅரசின் முதல் எச்சரிக்கையை மதித்து முதலிலே வெளியேறி விட்டார்கள் மீதி 15000 பேரை மீட்கவேண்டும். யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கிராஸ்பயரில் சிக்கலாம். துடிப்புடன் செயல்பட்டது இந்திய உயர்மட்ட குழு.

அரசியல் நிலை நடப்புகள் எதிர்காலம் விவாதிக்கப்பட, கூடவே உருவாக்கப்பட்ட டீம் செயற்பட தொடங்கியது. திட்டம்வகுத்த ஜெய்ஷங்கர்,அஜித் டோவலின் ஆணைப்படி உக்கரைனை சுற்றி உள்ள நாடுகளின் தூதரகங்கள் செயல்படத்தொடங்கின.
ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ஸ்லோவேகிய, மால்டொவா இந்த ஐந்து நாடுகளிலும் அந்த அரசாங்கத்திடம் பேசி கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கபட்டது. அவை இந்திய கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டது.

அதன் எல்லைகளில் என்ட்ரி பாய்ன்ட்கள் முடிவுசெய்யப்பட்டு உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு தெரிவிக்கப்பட, இரண்டு பக்கதகவல் பறிமாற்றத்துக்கு பின் இந்தியர்கள் அங்கே வரத்தொடங்க…அவர்கள் தங்கவைக்கபட்டு, இந்திய விமானம் வந்தபின் குழு குழுவாக திரும்பதொடங்கினார்கள்.

யாருமே எதிர்பாராத விதமாகதிரு ஹர்திபூரி, ஜோதிர்த்யா சிந்தியா, கிரண் ராஜு, வி.கே சிங்க் ஆகிய நான்கு மந்திரிகளும் ஆளுக்கொருவராக இந்தநாடுகளுக்கு பயணப்பட்டு அங்கேயே இருந்து வேலைகளை கவனிக்கிறார்கள்.

அனைவரையும் இணைக்கும் கோஆர்டினேட்டர் அஜித் தோவல். இதற்கிடையே உக்கரைன்அதிபர் மோடியை தொடர்புகொண்டு போரைநிறுத்த வேண்டுகோள் விடுக்க, புடின் தொடர்புகொண்டு விளக்கங்கள் கொடுக்க, வெளியுறவுதுறை அத்தனை அம்சங்களையும் அலசிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நேட்டோ நாடுகள் இந்த மீட்புவேலைகளை இன்னும் தொடங்கவே இல்லாதநிலை…

இந்தியா மட்டும் சிக்கலை சமாளித்து, மீட்பதைவிவரித்து விட்டு, மிக பெரிய ஜனத்தொகை கொண்ட இந்தியா கொரானாவை சமாளித்த அட்வென்சரையும் நினைவுபடுத்தி உலகுக்கே பாரதம் இப்போதெல்லாம் பாடம் சொல்லிக் கொடுப்பதாக சொல்லி அதிசயத்திருக்கிறது மேற்கத்தைய ஊடகம் ஓன்று.

இது உலகிலேயே மிகப்பெரிய மீட்ப்புநடவடிக்கை என்கிறது சிஎன்என் தொலைக்காட்சி.
பின் குறிப்பு : சொல்லாமல் இருக்க முடியவில்லை. மும்பை குண்டுவெடிப்பில் அலறிக் கொண்டிருக்க, அப்போதய உள்துறை அமைச்சரை எழுப்பி அவர் குளித்து உடைகளை மாற்ற எடுத்துக்கொண்ட நேரம் 2 மணிநேரமாம். அவரோ, மவுன சாமியாரோ மும்பை பயணப்படவே இல்லை..!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

100 நாளுக்கான செயல் திட்டத்தின் ம ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகள ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகளை மோடி பகிர்ந்துள்ளார் பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை ...

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்ப ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்பது குறித்து மோடி மகிழ்ச்சி 2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை எ ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை என்ற தலைப்பில் நாளை நடக்கும் மாநாடு 2023 டிசம்பர் 25ந்தேதி. "பாரதிய நியாய சன்ஹிதா 2023", ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...