பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், நாடி நடையை துரிதப்படுத்துவதாகவும், தாதுபலம் பெருக்கியாகவும், வீக்கம், கட்டிகளைக் கரைப்பதாகவும் செயல்படுகிறது.
மஞ்சளைச் சுட்டுப் புகையை முகரத் தலைவலி, நீர்க்கோவை, மண்டைநீர், மூக்கடைப்பு, நீர் ஏற்றம் ஆகியவை தீர்ந்து குணமாகும்.
மஞ்சளை நன்கு வெயிலில் உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்துவர குழந்தைகளின் கண் நோய் குணமாகும்.
ஒரு குவளை பாலில் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் கலந்து காலை, மாலை, சாப்பிட வறட்டு இருமல் தீர்ந்து குணமாகும்.
மஞ்சள், மருதாணி சமனளவு எடுத்து அரைத்து கால் ஆணிமீது வைத்துக் கட்டிவர கால்ஆணி குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.