அதிமுக., கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது

 ''இந்தியாவில், தீவிரவாதிகள், தேசதுரோக கும்பல்கள், பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி உள்ளது,'' என, கர்நாடகா உயர்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் ரவி தெரிவித்தார்.


சேலத்தில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட சி.டி ரவி நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகத்தில் கடந்த, 50 ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சிசெய்த, திமுக.,- அதிமுக., திராவிட கட்சிகள் தமிழகத்தின் வளர்ச்சியை கெடுத்து பின்னோக்கிசெல்லும் நிலைக்கு தள்ளிவிட்டன. தமிழகத்தில் வேலைவாய்ப்புகள், தொழில்வளர்ச்சி இல்லாததால், 4.5 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை தேடி, வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர்.

மின்சார பற்றாக் குறை இன்னும் தீர்ந்தபாடில்லை என்பதால், தொழிலதிபர்கள் தங்களின் தொழிலை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். டாஸ்மாக்கை அரசே நடத்தி, தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது. அமைதியாக இருந்த தமிழகத்தில், பாஜக., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் மீதானதாக்குதல் அதிகரித்துள்ளதோடு, காஷ்மீரை மிஞ்சும் அளவுக்கு, தீவிரவாதிகள், தேசவிரோத கும்பல்கள், பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிட்டது. இது வரை, 134 இந்து தலைவர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

திமுக., குடும்பக் கட்சியாக, தன் குடும்பத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில்கொண்டு, தமிழக மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை தாரைவார்த்து வருகிறது. அதிமுக., கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது. பா.ஜ.,வால் மட்டுமே, தமிழகத்தில், நிலையான நல்லாட்சியை மக்களுக்கு வழங்கமுடியும். மத்தியில் மோடி தலைமையிலான அரசு, சேலம் உட்பட தமிழகத்துக்கு, 12 ஸ்மார்ட் சிட்டி நகரங்களை உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதோடு, குளச்சல்துறைமுகத்தை மேம்படுத்த, 20 ஆயிரம்கோடி ஒதுக்கி கொடுத்து, பணிகளை துவக்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த, பத்து ஆண்டுகளில், இலங்கை கடற்படை யினரால், 550 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, அவர்களின் பொருட்களையும் இழந்துள்ளனர். பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்றபின், ஒரு மீனவர்கூட கொல்லப்படவில்லை.

தமிழகத்தில் தற்போது ஓட்டுக்கு பணம்கொடுக்கும் கலாசாரத்தை தடுக்க தேர்தல் கமிஷனிடம் பா.ஜ., சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக., பிரமுகர்கள் வீடுகளில் நடக்கும் ரெய்டுக்கு வருமான வரித்துறை யினரை, பா.ஜ., தூண்டி விடவில்லை. அவர்களின் பணியை அவர்கள் செய்கின்றனர். தமிழகத்தில் இருந்து, பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி.,யை மட்டும் வழங்கியபோதும், பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை வழங்கி வருகிறோம்.

மே, 6ல் மோடி பிரசாரம்: சேலத்தில் நாளை (இன்று) பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும், மே, 4ம் தேதி சென்னை, மதுரை, கன்னியாகுமரியில், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும், மே, 6ம் தேதி, சென்னை, ஓசூரில், பிரதமர் நரேந்திர மோடியும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...