5 மாநில தேர்தல் முடிவு மோடியின் வளர்ச்சி திட்டத்துக்கு கிடைத்த வெற்றி

5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க குறிப்பிடத்தக்க வெற்றிபெற்றிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்கள் அங்கீகரிக்கப் பட்டு இருப்பதாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

 

அசாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா கட்சி அசாமில் முதல் முறையாக ஆட்சியைபிடித்தது. கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும் தங்கள் வெற்றிகணக்கையும் தொடங்கி உள்ளது.

இந்த தேர்தல்வெற்றிக்கான காரணம், மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு நேற்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

 

எங்கெல்லாம் கூட்டணிக்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் கூட்டணி அமைத்து, பிரச்சினைகளை அடையாளம்கண்டு அதன் அடிப்படையில் திட்டங்களை வகுக்கவேண்டும் என்பதே சமீபத்திய 5 மாநில தேர்தல் மூலம் நாங்கள் கற்றபடிப்பினை ஆகும்.

அதற்காக, அசாமில் காங்கிரஸ்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடாததால்தான் தோல்வியடைந்தது என்ற நிதிஷ்குமாரின் கருத்தை ஏற்கமுடியாது. காரணம் கூட்டணி மட்டும் போதாது. உங்கள் செயல்பாடு, பிரச்சினைகளை அணுகும்விதம், தலைமைத்துவம் உள்ளிட்டவையும் தேர்தலின்போது கணக்கில் கொள்ளப்படும்.

அந்த வகையில் அசாம் மற்றும் கேரளாவில் காங்கிரசின் செயல்பாடு மிகவும்மோசமாக இருந்தது. ஊழலில் சிக்கியுள்ள அக்கட்சியால், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. மேற்குவங்காளத்தில் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைத்தும் எந்தபலனும் ஏற்படவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தையே தேர்தல்முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்ததேர்தலில் காங்கிரஸ் கட்சி ஓரம்கட்டப்பட்டு உள்ளது. அதேநேரம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ந்துவரும் கட்சியாக பா.ஜனதா உருமாறி வருகிறது.

30 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக நாங்கள் உருவெடுத்தோம். தற்போது 15 மாநிலங்களில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணிகட்சிகள் ஆட்சியில் உள்ளன. 35 சதவீத மக்கள்தொகை மற்றும் நாடடின் 45 சதவீத பகுதிகள் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...