மத்திய அரசின் உணவு பாதுகாப்புசட்டம் 33 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

நாட்டில் தற்போது 3 கோடியே 70 லட்சம் காஸ்இணைப்பு பெற்றுள்ள வாடிக்கை யாளர்கள் உள்ளனர். அதை 5 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம்  செய்துள்ளோம் என்று மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு எவ்வளவு விலை கொடுக்கவேண்டும் என்று  மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதோ அதை சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டும். அதை வாங்கி கொடுக்கும்பொறுப்பு அந்தந்த மாநில அரசுகளுக்கு உள்ளது.  மேலும் கரும்பு சப்ளைசெய்யும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பில் செட்டில்மெண்ட் செய்யதவறினால், ஆலை நிர்வாகம் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை  எடுக்கவேண்டும். மேலும் மக்கள் அன்றாடும் பயன் படுத்தும் உணவு பொருட்கள் மீதான தரத்தை உறுதிசெய்ய ஒவ்வொரு பொருட்களுக்கும் ஐஎஸ்ஐ அங்கீகாரம்  பெறுவதை கட்டாயமாக்கப்படும். மேலும் தரம்குறைந்த, பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான உணவு பொருட்கள் விற்பனைசெய்யும்  கம்பெனிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பலநிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை விற்பனைசெய்யாமல் வஞ்சிக்கிறார்கள். அவர்களை கட்டுபடுத்தும் நோக்கத்தில்  விரைவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்படும். நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் நீதி மன்றம் அமைக்கப்படும். மேலும் தங்க  ஆபரணங்கள் மீது ஹால் மார்க் முத்திரை பதிப்பது கட்டாயமாக்கப்படும். மேலும் நாட்டில் நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் வகையில், வரும் நாடாளுமன்ற  கூட்டத்தொடரில் புதியதாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும். இதற்கு நாடாளுமன்ற நிலை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில்  பொய்விளம்பரம் செய்வோர், விளம்பர தூதராக இருப்போர் மீது நடவடிக்கை எடுப்பது உள்பட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் நுகர்வோரின் வழக்குகளை விசாரணை நடத்த மாவட்ட மாநில தேசிய அளவில் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதில் மாவட்ட நீதிமன்றங்களில் 1 கோடி,  மாநில மற்றும் தேசிய நீதிமன்றங்களில் தலா 10 கோடி வழக்குகள் விசாரிக்கும்வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.நாடுமுழுவதும் தற்போது 3 கோடியே 70 லட்சம்  காஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் உள்ளனர். வரும் மூன்றாண்டுகளில் அதை 5 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். மேலும் எனது  துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 6.2 கோடி போலி வாடிக்கையாளர்கள் கண்டுப்பிடிக்கப் பட்டு காஸ் இணைப்பு ரத்து  செய்யப்பட்டது.

இதன்மூலம் 10 ஆயிரம் கோடி வரை மானியம் குறைந்துள்ளது. மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவு பாதுகாப்புசட்டம் 33 மாநிலங்களில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டபிதா டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் விழாவை அர்த்த பூர்வமாக கொண்டாடும் வகையில் அவர் பிறந்தவீடு, வாழ்ந்த  வீடு, உள்பட 5 இடங்களில் நினைவிடம் அமைப்பது உள்பட பலபணிகள் நடந்து வருகிறது. பாஜ ஆட்சி நாட்டிற்கு பொற்காலமாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர்  கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...