புற்றுநோய்க்கான மருத்துவம்

 பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி
பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு இரத்தம், சீழ், வெள்ளைப்பாடு போன்றவைகள் ஏற்படும், அவைகளை நீக்க வழிகள் .

காலையும் – மாலையும் விளக்கெண்ணெய், வேப்பஎண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சமமாகக் கலந்து வைத்துக்கொண்டு உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்கு உட்கொள்ள வேண்டும்.

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் – நன்கு மண்சட்டியில் வேக வைத்து பனை வெல்லம் கலந்து குடித்து வரவேண்டும்.

மாமரத்தின் பட்டையை நன்கு சுத்தம் செய்து விட்டு மண் சட்டியில் கஷாயமிட்டு, பனைவெல்லம் போட்டு காலையும் மாலையும் ஒரு குவளையளவு குடித்துவர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் சில மாதங்களில் குணமாகும்.

(உணவில் காரம், புளி, உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தாமல் பால்சாதம், மோர்சாதம் போன்றவற்றை மட்டும் உட்கொள்ள வேண்டும்).
உடலில் எங்கு புற்று நோய் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட மருந்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு குறைந்தது ஆறு மாதங்கள் பத்தியத்தோடு உட்கொள்ள வேண்டும்.

முற்றிய வேப்பிலை, வில்வ இலை, துளசி இலை, மா விலை, அருகம்புல், அத்தியிலை, கருப்பு வெற்றிலை, கீழா நெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, நித்யகல்யாணி இலை இவைகளைச் சம அளவாகச் சேகரித்து நிழலில் உலர்த்திப் பொடித்து மூன்று வேலைகளிலும் ஒரு தேக்கரண்டி பொடியாக காய்ச்சாத பாலில்போட்டுக் குடித்துவர வேண்டும். வேக வைக்காத காய்கறிகளையே காலையிலும் மாலையிலும் உட்கொள்ள வேண்டும். காலை இரண்டு காரட்டுகள், இரண்டு தக்காளி, அரையாக்கப்பட்ட பச்சை வெங்காயம் – மதியம் பப்பாளி, வாழை, ஆரஞ்சு கொய்யா போன்ற பழங்கள் – ஒரு வேளை கோதுமை – புழுங்கலரிசி ¾ ஆழாக்கு வீதம் சுடுநீரில் ஊறவைத்து எடுத்துக்கொண்டு பண்ணை வெல்லம் கலந்து உட்கொண்டு வரவேண்டும். இவ்வாறே பச்சைப் பட்டாணி, பச்சைக் கடலை போன்றவற்றையும் அவிக்காமல் சுடுநீரில் ஊறவைத்துத் தின்ன வேண்டும். காடுகளில் அலைந்து மேய்ந்து வரும் பசு மாடுகளின் பாலையும் காடுகளின் அலைந்து மூலிகைகளைத் தின்னும் வெள்ளாடுகளின் பாலையும் காய்ச்சாமல் குடித்து வரவேண்டும். அவ்வாறு சில மாதங்கள் உட்கொண்டு வந்தால் அல்லது சில ஆண்டுகள் உட்கொண்டு வந்தால் பூரண குணமடைய வாய்ப்புண்டு.

வெண் பூசணிச்சாரும், அருகம்புல் சாரும் தினம் விட்டுத் தினம் மாறி மாறி பருகி வரலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...