வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவச உடையினை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் டில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்.
வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது விவசாயிகளுக்கு மூச்சு திணறல், கண் பார்வை கோளாறு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதை தடுப்பதற்காக உயிரி தொழில்நுட்ப துறையின் கீழ் பெங்களூரில் இயங்கும் பிரிக் – இன்ஸ்டெம் நிறுவனமும், மற்றொரு தனியார் நிறுவனமும் இணைந்து விவசாயிகளுக்கான கவச உடையை தயாரித்துள்ளன. இலகுவான இந்த உடையை அணிந்து வயலில் மருந்து தெளிப்பது எளிதாக இருக்கும் என, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. துவைத்து அணியும் வகையிலான இந்த பாதுகாப்பு உடையின் விலை 4,000 ரூபாய்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |