‘தேஜஸ்’ போர் விமானம் மோடி பெருமிதம்

இந்திய விமானப் படையில் நேற்று மிகவும் எடைகுறைந்த ‘தேஜஸ்’ போர் விமானம் இணைக்கப் பட்டதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மிகவும் எடைகுறைந்த ‘தேஜஸ்’ என்ற போர் விமானத்தை அதிநவீன தொழில் நுட்பத்துடன் தயாரித்து வருகிறது. முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தை பயன் படுத்தி  தயாரிக்கப்பட்ட இந்த தேஜஸ் போர்விமானம், உலகின் மிகவும் எடை குறைந்தபோர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பாகிஸ்தானின் JF 17 போர் விமான ங்களை விட அதிக சக்திவாய்ந்த இலகுரக போர் விமானமான தேஜாஸ் முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப் பட்டதாகும். நீண்ட கால தாமதத்திற்கு பின் முதல் முறையாக இன்று 2 தேஜாஸ் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இரண்டு ஆண்டுகள் வரை பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இந்தவிமானங்கள் வைக்கப்பட்டிருக்கும். பின்னர், தமிழ்நாட்டில் உள்ள சூலூர் விமானப்படை தளத்துக்கு இவை அனுப்பி வைக்கப்படும் என தெரியவந்துள்ளது.

இந்திய விமானப்படையில் உள்நாட்டு தயாரிப்பான ‘தேஜஸ்’ போர்விமானம் இணைக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக, ட்விட்டரில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், முழுமையாக உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர்விமானம் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப் பட்டுள்ளது நமது இதயங்களில் அளவற்ற பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கி யுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...