அதிக ரூபாய் மதிப்புடைய நோட்டுகளை வாபஸ்பெறுவது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு, முன் கூட்டியே சிலருக்குத் தெரிந்ததாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் இனிசெல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து நாட்டில் பணப்பற்றாக்குறை நிலவி வருகிறது.
வரிஏய்ப்பு செய்து பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையாக பார்க்கப்படும் இந்த அறிவிப்புக்கு ஒரு புறம் வரவேற்பும், மறு புறம் எதிர்ப்பும் மாறிமாறி வருகின்றன.
இதனிடையே, உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவிப்பதற்கு முன்னரே அது குறித்த தகவல்கள் பாஜக தலைவர்கள் சிலருக்கு தெரிந்திருந்தது என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
இந்தியமக்கள் நேர்மையானவர்கள் என்ற நம்பிக்கை மத்திய பாஜக அரசிடம் திடமாக உள்ளது. அதே வேளையில், கருப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ள வெகு சிலரால், நாட்டுமக்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் பயங்கரவாத செயல்களுக்கு நிதி யுதவி அளிக்கவும் பயன்படுத்தப் படுகிறது. இத்தகைய முறை கேடுகளையும், சமூகவிரோத நடவடிக்கைளையும் வேரறுக்கவே ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சாமானிய மக்களுக்கு சில அசெüகரியங்கள் ஏற்படும் என்பதை அரசு உணர்ந்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளை முழுஅளவில் புழக்கத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. விரைவில் இந்தநிலைமை சீரடையும்.
மத்திய அரசின் செயல்பாடால் சில நாள்களுக்கு பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏற்படலாம். ஆனால், இந்த நடவடிக்கையால் தேசத்தின் நலனை நீண்டகாலத்துக்கு பாதுகாக்க முடியும்.
ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவது முன்கூட்டியே சிலருக்குத்தெரியும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது அபத்தமாக உள்ளது. பிரதமர் மோடி மக்கள்நலனுக்காக எவ்வாறு செயல்படுகிறார் என்பதை தேசமே உணர்ந்துள்ளது.
ஆனால், ஊழலில் ஊறித்திளைத்து வரும் சில கட்சிகள் (ஆம் ஆத்மி, காங்கிரஸ்) பிரதமர் மீது இவ்வாறு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. அவர்கள் கூறும் பொய்ப்புகார்கள் எதுவும் மக்கள் மன்றத்தில் ஏற்புடையதாக இல்லை என்றார் அவர்.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.