ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே உள்ளநிலையில், தற்போது 2வது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் நிம்கரே தொகுதி எம்எல்ஏ ஸ்ரீசந்த் கிருபாளினி, பீரார் தொகுதியின் ஜஸ்வந்த்சிங் யாதவ் ஆகிய இருவரும் கேபினட் தரத்திலான அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர கண்டேலா தொகுதியின் பன் சிதார், போப்லா கார் தொகுதியின் தலித்பெண் எம்எல்ஏ கம்சா மேக்வால், பன்ஸ்வாரா தொகுதியை சேர்ந்த தன்சிங்ராவத் மற்றும் சுசில் காத்ரா ஆகியோர் இணையமைச் சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அஜய்சிங், பாபுலால் வர்மா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். மேலும் ஜீத்மால், அர்ஜூன் லால் கார்க் ஆகியோர் இணையமைச்சர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.