குடியரசு துணைத்தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப்தன்கா் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
தில்லியில் பிரதமா் நரேந்திரமோடி பங்கேற்ற பாஜக நிா்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
குடியரசு துணைத்தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம்தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 5-ஆம்தேதி தொடங்கியது. ஜூலை 19-ஆம் தேதிவரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ள நிலையில், ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஜூலை 22-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்களுடன் எம்எல்ஏக்களும் வாக்களிப்பதால் அந்தத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாட்டின் பலஇடங்களில் நடைபெறும். ஆனால், குடியரசு துணைத்தலைவா் தோ்தலில் எம்.பி.க்கள் மட்டும்தான் வாக்களிப்பா். இதனால் அந்தத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் மட்டுமே நடைபெறும்.
குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்படுபவா் மாநிலங்களவைத் தலைவராகவும் பதவி வகிப்பாா்.
கடந்த 1951-ஆம் ஆண்டு மே 18-ஆம்தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் பிறந்தவா் ஜகதீப்தன்கா். ஜாட் சமூகத்தைச் சோ்ந்த அவா், இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தபின், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றாா். அதைத் தொடா்ந்து, ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகப் பணியாற்றினாா்.
முன்னாள் துணைப் பிரதமரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான தேவிலாலுக்கு நெருக்கமானவராக இருந்தாா். 1989-ஆம் ஆண்டு ஜனதா தளம் சாா்பில் ஜுன்ஜுனு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானாா். 1990-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் சந்திர சேகா் தலைமையிலான மத்திய அரசில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராக பதவிவகித்தாா்.
பிரதமராக பி.வி.நரசிம்ம ராவ் பதவி வகித்தபோது காங்கிரஸில் இணைந்தாா். ராஜஸ்தான் மாநில அரசியலில் களமிறங்கிய அவா், 1993-ஆம் ஆண்டு அங்குள்ள கிஷன்கா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அந்த மாநிலத்தில் அசோக் கெலாட் (ராஜஸ்தானின் தற்போதைய முதல்வா்) எழுச்சிபெற்றதால், ஜகதீப் தன்கா் பாஜகவில் இணைந்தாா்.
பின்னா், அந்த மாநில முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜேவுக்கு நெருக்கமானவராகிவிட்டாா் என்று கூறப்படுகிறது. அதன்பின்னா் அவரின் அரசியல் வாழ்வில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டநிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனதுவழக்குரைஞா் பணியில் மிகுந்த கவனம் செலுத்தினாா். ராஜஸ்தானில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஜாட் சமூகம் இடம்பெற முக்கிய பங்காற்றினாா்.
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |