ராம்நாத் கோவிந்த் வெற்றி என்பது முடிவான ஒன்று

ராம்நாத் கோவிந்த் இந்த பெயர் அறிவிக்கப்படும் முன் பெரிதாக நான் இவரின் மேல் கவனம் செலுத்தவில்லை எப்படியும் ஒரு பட்டியல் சாதியினரோ அல்லது பழங்குடியினரோ தான் ஜனாதிபதியாக வருவார் என்று மட்டும் அறிந்திருந்தேன். திரௌபதி முர்மு என்ற ஜார்கண்ட் மாநில ஆளுநர் பெயர் தான் அதிகமாக அடிபட்டுக்கொண்டு இருந்தது. பெண் அதோடு பழங்குடியினர் என்பது அவருக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தியது  இருப்பினும் ராம்நாத் கோவிந்த் இன்று சரியான நபராக அந்த பதவிக்கு முற்றும் தகுதி வாய்ந்தவராக அறியப்படுகிறார்.

இந்திய குடிமை பணியில் வெற்றி பெற்றவர் தான் விரும்பிய துறை கிடைக்காததால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனவர். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனி செயலராகவும் இருந்திருக்கிறார் அதோடு டெல்லி உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக வக்கீல் பணி செய்து வந்திருக்கிறார். அரசியல் சாசன சட்டத்தில் மிக தேர்ச்சி உள்ளவர் என்று சொல்லப்படுகிறது இந்த பதவிக்கு மிக முக்கியமான தேவை அது. அதோடு பெரும் அறிஞர் இந்திய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். 12 ஆண்டுகள் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்திருக்கிறார் இன்று பீகார் கவர்னர்.

கோலி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கோவிந்த் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உழைத்தவர் இன்று நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிக்க இருக்கிறார். பாஜக சாதி ஹிந்துக்களுக்கும் உயர் சாதியினருக்குமான கட்சி அது தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியவர்களுக்கு எதிரானது என்று தொடரப்பட்டு வரும் பொய் பிரசாரம் பல காலமாக பல் இளிக்கிறது இருந்தும் ஊடக வியாபாரிகளாலும் இந்திய அரசியலில் செல்லாக்காசாகிப் போன இடதுசாரி அடிவருடிகளாலும் மற்ற எதிர் கட்சிகளாலும் இது தொடர்ந்து வாந்தியெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

நியூயார்க் டைம்ஸ், எகானாமிஸ்ட், வாஷிங்டன் போஸ்ட் போன்ற பல மேலை நாட்டு இதழ்கள் தங்களை முற்போக்கு மற்றும் தாராளவாதிகள் என்று காண்பித்துக்கொண்டு கிளிப்பிள்ளை போல் நம் ஊர் பழுப்பு ஆங்கிலேயர்களின் உச்சாடனத்தையே திரும்ப திரும்ப உருவேற்றி வருகின்றன. அவர்கள் சவப்பெட்டியில் அடித்த கடைசி ஆணி இது என்றே நான் கருதுகிறேன். இந்தியாவின் ஆன்மாவை மோதியை விட நன்றாக அறிந்தவர் வேறு யாரும் இல்லை என்பதையே இது மீண்டும் நிரூபிக்கிறது. இவரின் வெற்றி என்பது முடிவான ஒன்று வேறு வேட்பாளர்கள் யாரும் நிற்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

நன்றி; முத்துசாமி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...