தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் தரமான கல்வி ஏழைகளுக்குக் எட்டக்கூடாது என்பதே ஸ்டாலினின் எண்ணம்

ஏழை மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய கல்வியையும், பள்ளிகளையும் எதிர்க்கும் அளவிற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் மற்ற கட்சிகளின் தலைவர்கள் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு எதிர்மறை அணுகுமுறையைக் கொண்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஏழைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டிய இந்த காலகட்டத்தில் ஹிந்தி திணிக்கப்படும் என்று இல்லாத கதையை சொல்வது, எப்படிப்பட்ட பள்ளிகளை ஏழைகளுக்கு கிடைக்காமல் தடுக்கிறார்கள் என்பதைப்பாருங்கள்

  • 30 ஏக்கர் பரப்பில் மிக விசாலமான பள்ளி
  • சர்வதேச தரத்திலான ஆய்வகம், நூலகம், கணினி, பேச்சுக்கூடம் இவை அனைத்தும்
  • நவீன விளையாட்டுத் திடல்
  • நுண்ணறிவு வகுப்புகள்

இவையெல்லாம் யாருக்குக் கிடைக்கும் என்றால் கிராமத்து குழந்தைகளுக்கு.  ஆம், நவோதயா பள்ளிகளின் மொத்த இடங்களில்                         100-ல் 75 இடங்கள் கிராமப்புற மாணவர்களுக்காக மட்டுமே.  ஆக, சர்வ வசதி கொண்ட கல்வியை கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைக்க கூடாது என முயல்கிறார்களா ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் போன்றோர்கள்?  இதை தமிழகத்தின் இளைய சமுதாயம் மன்னிக்காது.

அதுமட்டுமல்ல, இத்தகைய பள்ளிகள் மாவட்டத்திற்கு ஒன்று அமைக்க மத்திய அரசு கொடுக்கும் நிதி 20 கோடி.  இதை வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா?  ஆக, தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் தரமான கல்வி, தவறாமல் ஏழை கிராமத்துக் குழந்தைகளுக்குக் கிடைக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பொய்முகம் காட்டுகிறார்கள்.  உண்மையாக கிராமப்புற மாவணவர்களுக்காக இவர்கள் ஆதங்கப்படுகிறார்கள் என்றால் நவோதயாப்பள்ளிகளை இவர்கள் ஆதரிக்க வேண்டும்.


அதுமட்டுமல்ல, இதுவரை இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் 44 சதவீத மாணவர்கள் தலித் மாணவர்கள்.  நவோதயா பள்ளிகள் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்றாலும் தலித் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இடங்களில் சிறப்பு கூடுதல் பள்ளிகளை நிறுவிக் கொள்ளலாம் என்பது மட்டுமல்ல, நவீன வசதி கொண்ட ஹாஸ்டலுக்கு கட்டணம் வெறும் ரூபாய் 200 மட்டுமே.  அதுமட்டுமல்ல, பெண்குழந்தைகளுக்கும், தலித் குழந்தைகளுக்கும் இலவச உணவும், உறைவிடமும் உண்டு.  ஆக, ஸ்டாலின் தலித் குழந்தைகளும், பெண் குழந்தைகளும், கிராமத்துக் குழந்தைகளும் தரமான கல்வியைப் பெறக்கூடாது என்று நினைக்கிறார்களா? இதில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு என்று தனி இட ஒதுக்கீடும் உள்ளது.
இவ்வளவு நல்ல கல்வியை ஓர் மாநிலம் மறுக்க முடியுமா? அப்படி என்றால் இங்குள்ள அரசியல்வாதிகள் எவ்வாறு சுயநலவாதிகள் என்பதை தமிழக மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  தலித் குழந்தைகளுக்கு சிறப்பு இடங்கள், அவர்களுக்கு தரமான கல்வி, தரமான உணவு, உறைவிடம் கிடைக்கும் இப்பள்ளிகளை திருமாவளவன் எதிர்ப்பது ஏன்?


அப்படியென்றால், தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதற்காக என்று சொல்லும் அவர்கள் முகமெல்லாம் பொய் முகங்கள் தானே? அண்ணன் ஸ்டாலின் சொல்கிறார், இதனால் மாநிலத்தின் உரிமை பறிக்கப்படுகிறாதாம்.  ஆக மாநிலத்திற்கு உதவுவதால் எப்படி உரிமை பறிப்போகும்? ஹஐஆளு மருத்துவமனை ஏன் வருகிறது? மத்திய நிதியால் மாநிலத்திலுள்ளவர்களுக்கு தரமான சிகிச்சை வேண்டும் என்பதற்காக.  அதுபோல் தானே மத்திய நிதியிலிருந்து மாநிலத்திற்கு தரமான கல்வி வேண்டும் என்பதற்காக செய்யும் ஏற்பாடுகள், எப்படி மாநில உரிமையில் தலையிடுவதாக அமையும்? அப்படியே கம்யூனிஸ்டுகளும் இதே குற்றச்சாட்டை சொல்கிறார்கள்.
.
அப்படியென்றால், தாங்கள் ஆளும் மாநிலங்களாகிய கேரளாவில் 14 பள்ளிகளும், திரிபுராவில் 4 பள்ளிகளும், மேற்கு வங்காளத்தில் 18 பள்ளிகளும், தமிழ் பேசும் புதுச்சேரியில் 4 நவோதயா பள்ளிகளும் அனுமதித்தது ஏன்? அதுமட்டுமல்ல, நான் அங்கு வாங்கும் கட்டண விவரங்களைக் கொடுக்கிறேன்.  குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தத்தளிக்கும் பெற்றோர்களே இவர்களை மன்னிக்க மாட்டார்கள்.  ஆம், சேர்க்கை கட்டணம் ரூபாய். 25.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டணம்     –  இல்லை
9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கட்டணம்    
– ரூ.40 (மாதம்)
11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கட்டணம் – ரூ.50 (மாதம்)

பின்வரும் நபர்களுக்கு கட்டணம் இல்லை.  குறிப்பாக பெண்கள்,  பள்ளி ஊழியர் பிள்ளைகள், இராணுவ வீரர் பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள் பிள்ளைகள் இவர்களுக்கு.  ஆக, இப்படிக் கட்டணக் குறைவான பள்ளிககளை எதிர்ப்பதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.  அதுமட்டுமல்ல, இந்த நவோதயா பள்ளிகளின் முக்கியமே அந்தந்த மாநில மொழிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்பதுதான்.


அனைத்து மாநிலங்களும் இப்பள்ளிகளை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர்.  இங்கு தமிழுக்கு முதன்மை மொழி என்பதை உயர்நீதி மன்றத்தில் எடுத்துச் சொல்லியும், ஹிந்தி திணிப்பு என்ற ஓர் பொய்யான வாதத்தை வைத்து இத்தனை நன்மைகள் இருக்கும் பள்ளிகளை தடுப்பதை தமிழக மக்கள் குறிப்பாக கிராமப்புற மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.  திரு.  ஸ்டாலின், திரு.  திருமாவளவன் போன்றவர்களின் சுயநலம் இங்கே அப்பட்டமாக வெளிப்பட்டிருப்பதை தமிழக மக்கள் உணர்வார்கள் என்பதே உண்மை.
 என்றும் மக்கள் பணியில்
                                                                               

(டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)

பாஜக மாநிலத் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...