தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதியகவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, தமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் தற்போது மேகாலயா கவர்னராக இருந்துவருகிறார். தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்து வரும் வித்யா சாகர் ராவிற்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் 1940 ம் ஆண்டு ஏப்ரல் 16 ம்தேதி பிறந்தவர். இவர் அசாம் கவர்னராக பணியாற்றி உள்ளார். நாக்பூர் லோக்சபா தொகுதியில் இருந்த 3 முறை எம்பி.,யாக தேர்வு செய்யப் பட்டவர். துவக்கத்தில் இவர் அகில இந்திய பார்வர்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் காங்கிரசில் இருந்த இவர் 1991 ல் பாஜக.,வில் இணைந்தார்.
இதேபோன்று, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு புதியதுணைநிலை கவர்னராக தேவேந்திர குமார்ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மேகாலயா கவர்னராக கங்கா பிரசாத், அசாம் கவர்னராக ஜெகதீஷ் முகி, அருணாச்சல பிரதேச கவர்னராக பி.டி.மிஸ்ரா, பீஹார் கவர்னராக சத்யபால் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.