போர்ட் பிளேர் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என பெயர் மாற்றம் -அமித் ஷா

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ‘ எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: காலனித்துவ முத்துரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

முந்தைய பெயரானது, காலனித்துவ பாரம்பரியத்தை கொண்டு இருந்தது. ஸ்ரீவிஜயபுரம் என்ற பெயரானது, நமது சுதந்திர போராட்டத்தின் வெற்றியையும், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளின் தனித்துவத்தையும் பிரதிபலிக்கிறது.

நமது சுதந்திர போராட்டம் மற்றும் வரலாற்றில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. சோழ அரசின் கடற்படை தளமாக செயல்பட்ட இந்த தீவானது, இன்று நமது பிராந்திய மற்றும் வளர்ச்சி நோக்கங்களுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.இங்கு தான் நேதாஜி முதன்முறையாக நமது தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீர சாவர்க்கர் மற்றும் பலரை இங்கு தான் சிறையில் அடைத்தனர். இவ்வாறு அந்த பதிவில் அமித்ஷா கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்திக்கும் பிரதமர் மோடி பிரதமர் மோடி வரும் 30ம் தேதி உ.பி., மாநிலம் ...

உலக நாடுகள் பாராட்டும் ஆபரேஷன் ...

உலக நாடுகள் பாராட்டும் ஆபரேஷன் சிந்தூர் 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு ...

உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாட� ...

உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா ''உலகில் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. வட ...

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்� ...

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் ''பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்தால், கடும் விளைவுகளை சந்திக்க ...

துணிச்சலாக செயல்பட்ட வீரர்கள் 3 ...

துணிச்சலாக செயல்பட்ட வீரர்கள் 33 பேருக்கு வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு துணிச்சலாக செயல்பட்ட வீரர்கள் 33 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...