டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீனா பாராட்டு

நாடுகளுக்கு இடையே சர்வதேசளவில் வர்த்தக உறவுகள் வேண்டும் என்று டாவோஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடிக்கு சீனா பாராட்டு தெரிவித் துள்ளது.


உலகப்பொருளாதார அமைப்பின் மாநாட்டு, ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் செவ்வாய்க் கிழமை தொடங்கியது. இந்தமாநாட்டில், 70 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். உலகவங்கி, சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.), உலகவர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ.) ஆகியவற்றின் தலைவர்களும், பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், 'பல நாடுகள் தங்கள் உள்நாட்டு தொழில் துறையைப் பாதுகாக்கிறோம் என்றபெயரில், வெளிநாடுகளுடன் வர்த்தகத் தொடர்பின்றி உள்ளன; இது, பயங்கரவாதம், பருவ நிலை மாற்றம் ஆகியவற்றைப் போல் மிகவும் அபாயகரமானது'' என்றார்.


மோடியின் இந்த உரையை வரவேற்று, சீனாவில் 'குளோபல் டைம்ஸ்' போன்ற நாளிதழ்கள், முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், மோடியின் உரைக்கு சீனவெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சன்யிங் பாராட்டு தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக, அவர் புதன் கிழமை மேலும் கூறியதாவது: வளரும் நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் பயன்பெற வேண்டுமெனில் தாராள மயமாக்கல் நடவடிக்கையை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று மோடி தனது உரையில் வலியுறுத்தினார். வெளிநாடுகளுடனான வர்த்தக உறவுகளைத்தடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடவேண்டும் என்றும் அவர் கூறினார்.


உலகப் பொருளாதார வளர்ச்சிக்காகவும், அனைத்து நாடுகளும் பயன் பெறுவதற் காகவும், சர்வதேச தாரள மயமாக்கல் நடவடிக்கையை வலுப்படுத்த இந்தியா உள்பட அனைத்து நாடுகளுடன் இணைந்து செயல் படுவதற்கு சீனா தயாராக உள்ளது. இதேகருத்தை, முந்தைய ஆண்டுகளில் டாவோஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் வலியுறுத்தினார்.


சீனாவின் மிகப் பெரிய அண்டை நாடான இந்தியாவுடன் கருத்து வேறுபாடுகளை களைந்து, பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று சீனா விரும்புகிறது. இது, இருநாட்டு மக்களின் விருப்பம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...