செப்டம்பர் 9இல் நடைபெற உள்ள பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமைதாங்க உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பரிக்கா ஆகிய ஐந்து முக்கிய வளரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பு 2006இல் உருவாக்கப்பட்டது.
இதன் 13ஆவது உச்சி மாநாடு, இந்தியாவின் தலைமையில், வரும்வியாழன் அன்று காணொளி மூலம் நடத்தப்பட உள்ளது. பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ (Jair Bolsanaro), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), சீனஅதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping), தென் ஆப்பரிக்க அதிபர் சிரில் ரமபோசா (Cyril Ramaphosa) ஆகியோர் இந்தமாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். தலைமை உரையாற்ற உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பன்னாட்டு உறவுகளில் சீர்திருத்தங்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துபேச உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சரகம் கூறியுள்ளது. பிரதமர் மோடி தலைமை வகிக்கும் இரண்டாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |