பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைமீது கொண்ட ஈடுபாட்டினால் பாஜகவில் இணைந்ததாக பிரபலமல்யுத்த வீரர் தலீப் சிங் ரானா (தி கிரேட் காளி) இன்று (திங்கள் கிழமை) மனம் திறந்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்கை தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தபின்பு இதனை அவர் தெரிவித்தார்.
அமைச்சரை சந்தித்தபின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “ நான் அமைச்சர் ஜிதேந்தர் சிங்கை சந்திப் பதற்காக வந்தேன். அவரும் என்னைப்போல மலைவாழ் பகுதியைச் சேர்ந்தவர். அதன் காரணத்தினால் அவரைப் பார்க்க வந்தேன். இதுஒரு சாதாரண சந்திப்புதான்” என்றார்.
பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு அவர், “நான்பாஜகவில் இணைந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். பிரதமர் நரேந்திரமோடியின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டுதான் பாஜகவில் இணைந்தேன்” என்றார்.
மத்திய அமைச்சருடனான இந்தசந்திப்பு பாஜகவில் அவர் இணைந்து 3 மாதங்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் வாரம் ஜிதேந்திர சிங், மாநிலங்களவை உறுப்பினர் அருண்சிங், மக்களவை உறுப்பினர் சுனிதா துக்கல் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
தி கிரேட் காளி மல்யுத்த போட்டியில் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். அவர் மிகச்சிறந்த மல்யுத்த வீரர்களான ஜான் சீனா, பட்டிஸ்டா, ஷான் மைக்கேல்ஸ் போன்றவர்களுடன் சண்டையிட்டுள்ளார்.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |