ராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்

காஷ்மீரின் சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து, ராணுவம் அளித்த பதிலடியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஜம்மு நகரின் புறநகர் பகுதியில் சஞ்சுவான் ராணுவ முகாம் உள்ளது. இந்த ராணுவ முகாமுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை நுழைந்த ஜெய்ஸ் இ முகம்மது இயக்கதீவிரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு இளநிலை ராணுவ அதிகாரி உள்பட, 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ராணுவ வீரர்கள் தேடுதல்வேட்டையில் தீவிரமாக இறங்கினர். இந்த தேடுதல் வேட்டையின் போது ராணுவ முகாமுக்குள் இருக்கும் குடியிருப்புகளில் தங்கிஇருக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை பத்திரமாக வெளியேற்றினர். இதையடுத்து பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் கடுமையாக துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் நேற்று முன்தினம் மாலையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் ராணுவத்தினருடன் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் மேலும் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதேசமயம், இரு தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ராணுவ முகாமின் மக்கள்தொடர்பு அதிகாரி லெப்டினென்ட் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், தீவிரவாதிகளுடன் தொடர்ந்து ராணுவத்தினர் சண்டையிட்டு வருகின்றனர். முகாமில் தங்கிஇருக்கும் 150 ராணுவத்தினர் குடும்பமும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத்தெரிவித்தார்.

இந்த சம்பவத்தையடுத்து, முகாம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முகாமின் பின்பக்கம், முகப்புப் பகுதியில் ராணுவத்தினரின் குண்டு துளைக்காத வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜம்மு-லக்கன்பூர் புறவழிச்சாலையில் இந்த ராணுவமுகாம் அமைந்து இருக்கிறது. ஆனாலும், மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் ராணுவத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

முகாமைச் சுற்றி சி.ஆர்.பி.எப் படையினரும், போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த 9-ம்தேதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவுதினம் வருவதால், ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்கெனவே புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...