மோடி அரசின் தவறு – மன்மோகன் சிங்

பெங்களூருவில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு மற்றும் அவசர கதியில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகிய இரண்டும் மோடி அரசு தவிர்த்திருக்க வேண்டிய பெரிய தவறுகள். இந்த இரு தவறுகளால் பொருளாதாரத்தில் கடுமையான இழப்பும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. நமது சிறு, குறு உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோரை கடுமையாக பாதித்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். பெட்ரோல் விலை கூடிக் கொண்டே போகிறது. இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

*** டியர் மன்மோகன் ஜி. உங்கள் மீது எல்லோருக்கும் ஒரு மரியாதை உண்டு. ஆனால், கர்ணனைப் போல நீங்கள் இருக்கும் இடம் (காங்கிரஸ்) சரியில்லை. நரசிம்மராவுக்காக செஞசோற்று கடனை தீர்க்க சேராத இடத்தில் நீங்கள் தொடர்ந்து இருக்கிறீர்கள். உங்களை நாங்கள் பப்புவைப் போல் என்றும் விமர்சிக்க மாட்டோம். அதே நேரம் உங்களை நாங்கள் ‘சிங் ஜி’ என அழைக்க நினைக்கும் போது நீங்கள் யாருக்கோ, எதற்காகவோ ‘ஜிங் ஜி’யாக (ஜால்ரா) செயல்படுவது வேதனை தருகிறது.

பொதுவாக உங்கள் கேள்விக்கு பொருளாதார மேதைகளால் மட்டுமே பதில் சொல்ல முடியும். ஆனால், இந்த உங்கள் பேச்சிற்கு என்னைப் போல் சாதாரண அறிவு படைத்தவர் கூட பதில் சொல்லலாம்.

பணஇழப்பு, மற்றும் ஜிஎஸ்டியை கொண்டு வந்திருக்கக் கூடாது என்றால் பணஇழப்பு மற்றும் ஜிஎஸ்டி கொண்டு வந்த போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவரும் உங்கள் கட்சியின் வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றிய மூத்த தலைவர் பிரனாப் முகர்ஜி இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கலாமே. ஜி.எஸ்.டி., அறிமுகத்தின் போது நாடாளுமன்றத்தில் பேசிய அவர் ஜிஎஸ்டி கொண்டு வந்ததற்காக மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாரட்டாலாம். அவர் துணிச்சல் மிக்க தலைவர், இப்டிப்பட்ட பிரதமரே இந்தியாவிற்கு தேவை என புகழ்ந்தது ஏன். எனக்கு தெரிந்து காங்கிரசில் உங்களுக்குப் பிறகு பொருளாதாரத்தில் திறமையானவர் பிரனாப் முகர்ஜிதான். இதை உங்களாலும் மறுக்க முடியாது.

சரி இந்த இரண்டும் கொண்டு வந்ததற்கு பிறகு இனி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 தாண்டாது என நீங்கள் சொன்னீர்கள். இதை நீங்களாக சொல்ல வாய்ப்பே இல்லை. உங்களை யார் இப்படி சொல்லச் சொல்லி இருப்பார்கள் என இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், இன்றைய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது. இது வரும் நிதியாண்டில் 7.5 சதவீதமாக உயரும் என உலக வங்கி உள்பட பல அமைப்புகள் ஆதாரத்துடன் மிகத் தெளிவாக கூறியுள்ளது. தவிர, பணஇழப்பு, ஜி.எஸ்.டி., இரண்டும் ஒரே ஆண்டில் அமல்படுத்தியதால் முதலில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஒருசட்டத்தை அமல்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. பணிஇழப்பு நடவடிக்கையால் இப்போது வங்கியில் அதிக பணம் இருக்கிறது. சிறு, குறு தொலில் தொடங்குவோருக்கு வங்கிகள் மிக எளிதாக கடன்களை கொடுக்கின்றன.

ஜிஎஸ்டியால் மாநில அரசுகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும். மத்திய அரசுக்கு பெரிய வருவாய் கிடையாது. ஆனால், வருமானவரி கட்டுவோரின் எண்ணிக்கை கனிசமாக கூடும். இதுதான் மத்திய அரசுக்கு லாபம். தற்போதைய சூழலில் பெட்ரோலிய பொருட்களால் கிடைக்கும் வரிதான் மத்திய அரசு க்கு முக்கியமான வருவாயாக உள்ளது. இதையும் விட்டுவிட்டால் மத்திய அரசின் திட்டங்களுக்கு நாட்டை 70 வருடங்களாக கொள்ளை அடித்த காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்துதான் பணம் பெற வேண்டும். தவிர, பெட்ரோல் விலை காரணமாக இனி அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற (ஜிஎஸ்டியால்) வாய்ப்பில்லை. அதோடு, மோடியின் இந்த சீர்திருத்த நடவடிக்கையால் 70 ஆண்டு இந்திய வரலாற்றில் மோடி அரசு மட்டுமே உலக வங்கியில் கடன் வாங்கவில்லை.உங்கள் வாதப்படி நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருந்தால் இன்று உலக வங்கியிடம் மோடி அதிக அளவு கடன் வாங்கியிருக்க வேண்டுமே. அப்படி அவர் எதையும் வாங்கவில்லையே.

சரி இனி உங்களிடம் நான் கேள்வி கேட்கிறேன்,

1. உங்கள் ஆட்சியில் பணவீக்கம் 2011&-12 முதல் 2013-&14 (3 ஆண்டு சராசரி) 9.8%

இப்போது மோடி ஆட்சியில் 4.28%

2. உங்கள் மொத்தவிலைவாசி குறியீட்டின் சாதனை 7.4%

இப்போது மோடி ஆட்சியில் மூன்றிலொருபங்கான 2.47%

3. உங்கள் ஆட்சியில் ஜிடிபி 6%

இப்போது மோடி ஆட்சியில் 7.5ஐ தொடப் போகிறது.

4. நீங்க வைத்துவிட்டுப்போன அந்நிய செலாவணிக் கையிருப்பு 296 பில்லியன் டாலர்.

இப்போது மோடி ஆட்சியில் அம்மாடியோவ் 426 மில்லியன் டாலர்கள். அதவது 44சதவீதம் அதிகம்.

5. நீங்கள் வைத்துவிட்டுப்போன நிதிப்பற்றாக்குறை 5.2%

இப்போது மோடி ஆட்சியில் வெறும் 3.5%தான்.

6. 2014ல் நீங்கள் ஆட்சியை விட்டுப் போகும் போது பெட்ரோல் விலை ரூ. 74. இப்போது ரூ. 76.

உங்கள் ஆட்சியில் பெட்ரோல் மீதான வரியைக்குறைத்து அதனை சரிக்கட்ட நீங்கள் பல லட்சம் கோடி அன்னியக்கடன் வாங்கி எங்கள் தலையில் வட்டியோடு கட்டிவிட்டீர்கள். நிதிப்பற்றாக்குறை இங்கு குறைந்துவிட்டதால் இப்போது உலக வங்கிக் கடனே வாங்கவேண்டிய அவசியமில்லை. கடத்தல், ஹவாலா ஒடுக்கப்பட்டதால் மோடியை சில சிறுபான்மையினர் வெறுப்பது புரிந்துகொள்ளத்தக்கதே.

ஆனால் அவர்களின் வாக்குவங்கிக்காக நீங்கள் எதிர்ப்பது நியாயமா? இனியும் இத்தாலி அடிமையாக இருப்பது உங்களுக்கு உறுத்தலாக இல்லையா?

தமிழ்செல்வியின் இந்த அனைத்து கேள்விகளுக்கும் உங்களிடமிருந்து பதில் தேவை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...