தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சிதலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆராய்ச்சி மாணவி சோபியா, “தமிழிசை இந்தவிமானத்தில் வருகிறார் நான் சத்தம் போடப்போகிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுவிட்டு சத்தம் போட்டுள்ளார். திட்டமிட்டு செய்பவர்களுக்கு எப்படி அறிவுரைகூறமுடியும். எனினும் நான் அறிவுரை கூறத்தான் அவரை அழைத்தேன். ஆனால், அதற்கு அடங்காமல் அவர் சத்தம்போட்டார். அதனால் நான் புகார் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டேன்.
பின்னர் அவர்கள் மற்றொரு புகாரை தெரிவித்து இருக்கி றார்கள். அதில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சார்ந்த நான்(சோபியா) என்று குறிப்பிட்டு இருக்கிறார். எதற்கு என்று ஒருதொலைக்காட்சி கேட்டதற்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம்பேரை இணைப்பதற்காகத் தான் குற்றாலம் சென்றோம். அதனால் நாங்கள் அதை பதிவுசெய்கிறோம் என்கிறார்கள். எந்த அளவுக்கு உள்நோக்கத்தோடு அவர்கள் செயல்பட்டுகொண்டு இருக்கிறார்கள். அவர் தரப்பில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறானது. எனவே இதை சட்டப்படி எதிர்கொள்வேன். அதில் எனக்கு எந்தபயமும் இல்லை.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பில் டி.டி.வி.தினகரனும், திமுக.வினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊழலுக்கு எதிராக பேச ராகுல் காந்திக்கு தகுதி இல்லை. தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டிபூசல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆர்ப்பாட்டத்தையே நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றமுடியாது என்று கூறுகிறார். ஆனால், அவர்கள் கட்சியினரால் கோஷ்டி பூசல் இன்றி சும்மா இருக்க முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.