ராகுலின் நாசகார புத்தி ஏமாற்றத்தை தருகிறது

உடல்நலம் குன்றியுள்ள என்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் பார்க்க வந்து, அதை தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது வேதனை அளிப்பதாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்திக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில் கூறியுள்ளதாவது:
அன்புள்ள திரு ராகுல்,

கடும் நோயினால் அவதிப் பட்டு, தீவிர மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருக்கும் கோவா முதல்வரான என்னைக் காங்கிரஸ் தலைவர் சொல்லாமல் கொள்ளாமல் நேற்று (29-01-2019) சந்திக்க வந்தது ஆறுதல் சொல்வதற்கென நினைத்தேன். அரசியலைக் கடந்து நாகரிகம் போற்றும் தன்மையினால் அதை நான் வரவேற்றேன்.

பேசியது வெறும் ஐந்து நிமிடங்கள். அதில் அரசியலோ, ரஃபேல் ஒப்பந்தம் குறித்தோ ஒரு வார்த்தை கூட நாம் பேசவில்லை. ரஃபேல் என்ற வார்த்தையைக் கூட நீங்கள் உச்சரிக்கவில்லை.

ஆனால் என்னைச் சந்தித்து வெளியேறிய பிறகு, “ரஃபேல் விமானங்களை வாங்குவதில் எனக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை; ரஃபேல் விவகாரத்தில் நடந்தது என்ன என்றே எனக்குத் தெரியாது” என்றெல்லாம் நான் சொன்னதாக நீங்கள் கதை கட்டிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தமும், ரஃபேல் விமானங்கள் வாங்கியதும் நம் நாட்டு “பாதுகாப்பு வர்த்தக நடைமுறை”களின் படியே நடந்தன. தேசப் பாதுகாப்பை கவனத்தில் கொண்டும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியும் தான் போர் விமானங்கள் வாங்கப்பட்டன. இது ஏற்கனவே நான் சொன்னது தான். இன்றைக்கும் இது பொருந்தும்.

அற்ப அரசியல் ஆசைகளுக்காக எனது சந்திப்பைச் செய்தி ஆக்கியதையும், அதிலும் என்னைப் பற்றிப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் அளவுக்கு நீங்கள் தரம் தாழ்ந்ததையும் வைத்துப் பார்க்கும்போது உங்கள் நடத்தையை, நலம் விசாரிக்க வந்த நோக்கத்தைச் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

நலம் பெற வேண்டும் என என்னை வாழ்த்த வந்தீர்கள் என நினைத்து ஏமாந்து போனேன். உங்கள் நாசகார புத்தி அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

மிகுந்த ஏமாற்றத்துடன், இப்போதாவது உண்மையைச் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் அல்பத்தனமான அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காக இனியாவது நோயாளிகளை நாடிப் போகாதீர்கள்!

கொள்கைப் பிடிப்பினாலும், மேற்கொண்ட பயிற்சியினாலும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், எல்லா விதமான இடர்பாடுகளையும் எதிர்கொண்டு கோவா மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

எம் மாநில மக்களுக்காகவும், என் தேசத்திற்காகவும் என்றென்றும் என் தொண்டு தொடரும்!

இப்படிக்கு
மனோகர் பாரிக்கர்
கோவா முதலமைச்சர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...