பட்ஜெட் முக்கிய அம்சம்

குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு:

விவசாயத்துக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 22 வேளாண் பயிர்களுக்கு மத்திய அரசு குறைந்தப்பட்ச ஆதரவு விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, உற்பத்தி செலவை விட 50 சதவீதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது உள்ளதை விட குறைந்தபட்ச ஆதரவு விலை 1.5 மடங்கு அதிகமாக விவசாயிகளுக்கு கிடைக்கும். இது தவிர விவசாயிகளின் வருமானம் 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும்.

சிறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் விவசாயிகள் சம்மான்திட்டம். இதன்படி, ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும். 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம்வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்தவருமான உறுதி திட்டம். இதன்மூலம் நாடுமுழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவர். கிசான் கார்டுதாரர்களுக்கு வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்.

வரி செலுத்துவோர்

வரி செலுத்துவோரில் இனி ஐந்து லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ரூ. 6.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள், தங்களது வருமானத்தை பிராவிடண்ட் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் போன்ற சில வருமான வரி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யும்பட்சத்தில், வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 3 கோடி பேர் பயனடைவார்கள்.

கிராமப்புற இந்தியா

கால்நடைத் துறை மற்றும் மீன் வளத்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு மீன்வளத் துறை அமைக்கப்படும் என்ற அறிவிப்போடு, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையிலான நிதி உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் பயனடையும் விதமான அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

தொழிலாளர்கள்

இந்த பட்ஜெட்டில் இடம்பெற்ற மிக முக்கியமான அறிவிப்பு என்னவென்றால், மாதம் 15,000 ரூபாய்க்குக் கீழ் வருவாய்கொண்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள `பிரதம மந்திரி ஷ்ராம் யோகி மந்தன்’ என்ற பெயரில் மெகா பென்ஷன் திட்டம்தான். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாதம் 100 ரூபாய் ப்ரீமியம் செலுத்தவேண்டியிருக்கும். இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 10 கோடி பேர் பயன்பெறுவர். அமைப்பு சாரா தொழிலாளர்கள், 60 வயதுக்குப் பிறகு மாத ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ.3000 பெறுவார்கள். இதேபோல், பி.எஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்குச் சாதகமானதுதான்.

ரியல் எஸ்டேட்

இடைக்கால பட்ஜெட்டில், ரியல் எஸ்டேட் துறைக்கும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் வீடு என்ற வாக்குறுதி போக, வீட்டுக் கடனுக்கான வரிச்சலுகை இனி இரண்டு வீடுகளுக்கு வழங்கப்படும். அதாவது, ஒரு வீட்டின் மீதான மூலதன ஆதாய வரிக்கு அளிக்கப்பட்டு வந்த வரிவிலக்கு, இனி இரண்டு வீடுகளுக்கு வழங்கப்படவுள்ளது. இரண்டாவதாக வாங்கிய வீட்டிலும் வீட்டு உரிமையாளரே தங்கியிருந்தால், அதற்குக் கணக்கிடப்படும் வாடகை வருமானத்துக்கு வரி எதுவும் இல்லை.

மேலும், வீட்டு வாடகை வருமானத்துக்கான வரிச்சலுகை தொகையும் ரூ.1.8 லட்சத்திலிருந்து ரூ.2.4 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உட்கட்டமைப்புத் துறையை ஊக்குவிக்க, ரூ.19,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு இருக்கும் ஜிஎஸ்டி வரிச்சுமையைக் குறைக்க, அமைச்சகங்கள் திட்டமிட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய ரக கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக கார் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள், உடனடியாக கார் வாங்கும் திட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.6 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் சிறிய ரக கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், சந்தையில் முன்னிலை வகிக்கும் மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும்பயனடையும். இதுதவிர, பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும்விதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரி, மின்மோட்டார் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கான வரி, 10 முதல் 25 சதவிகிதம் வரை குறைக்கப்படும் என்ற அறிவிப்பினால், மின்சார வாகனங்களுக்கான சந்தை ஏற்றம் காணும்.

100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.60,000 கோடி

நிலம் இல்லாத விவசாயிகள், ஏழைகளின் வருமானத்தை அதிகரிக்க நிலையான அமைப்பு உருவாக்கப்படுவது அவசியம். இது தவிர இந்த 2019-20ம் நிதியாண்டில் 100 நாள் வேலை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு ₹60,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு தானியம் வழங்க கடந்த 2013-14 ம் ஆண்டில் ₹92,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 2018-19ல் 1.7 லட்சமாக உயர்த்தப்பட்டது.

ஏழைகளுக்கே முதல் உரிமை’

பட்ஜெட்டில் நிதியமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில்: கிராமங்களின் ஆன்மாவை காக்கும் வகையில், நகர்ப்புறங்களில் ஏற்படுத்தப்படும் வசதிகளை கிராமங்களிலும் ஏற்படுத்த நாங்கள் திட்டமிடுகிறோம். நகரத்துக்கும்-கிராமத்துக்கும் உள்ள இடைவெளியை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் வளங்களில் ஏழைகளுக்கே முதல் உரிமை.

பிசிஏ.யில் இருந்து 3 வங்கி விடுவிப்பு:

வராக்கடன் காரணமாக வங்கிகளின் நிதி நிலை மோசமானதால், இவற்றை மீட்டெடுக்க பிசிஏ எனப்படும் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டிய சீரமைப்பு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. வராக்கடனில் மூழ்கிய 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் பிசிஏ நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டன. இவற்றின் நிதி நிலை, செயல்பாடுகள் முழுமையாக ரிசர்வ் வங்கி கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டன. இந்த வங்கிகள் புதிய கிளை திறப்பது, கடன் வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகிய மூன்று வங்கிகள் ரிசர்வ் வங்கியின் பிசிஏ நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற பொதுத்துறை வங்கிகளிலும் இந்த நடவடிக்கையில் இருந்து விரைவில் விடுபடும், என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

பட்ஜெட் செலவினம் 13 சதவீதம் உயரும்:

புதிய திட்டங்கள், மேம்பாடு, நவீனமயம் போன்றவற்றின் காரணமாக, ஒவ்வொரு நிதியாண்டிலும் மத்திய அரசுத் துறைகளின் செலவினங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த 2018-19ம் நிதியாண்டில் மாற்றியமைக்கப்பட்ட பட்ஜெட் செலவினம் ₹21.57 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டில் அரசின் செலவினம் 13 சதவீதம் உயரும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

திருட்டு சிடியை ஒழிக்க சட்டம்:

பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய பியூஷ் கோயல், ‘திரைப்படத்துறையின் வளர்ச்சி அவசியமானது. இது மிகப்பெரிய வேலைவாய்ப்பை உள்ளடக்கி ஒரு துறை. இத்தகைய பொழுதுபோக்கு துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் திரைத்துறையில் படங்களுக்கு அனுமதி வழங்குவதில் இனி புது முறை அமல்படுத்தப்படும். திரைப்படங்களின் படப்பிடிப்புகளை சுலபமாக நடத்த இணையதளம் வழியே ஒற்றைச் சாளரமுறையில் அனுமதி வழங்கப்படும். இதற்கு முன்பு வெளிநாட்டை சேர்ந்த திரையுலகினருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைத்தது. இனி இந்திய திரையுலகினருக்கும் இந்த அனுமதி கிடைக்கும். திரைத்துறையில் வீடியோ பைரசி பெருகி வருகிறது. இதைத் தடுக்க ஒளிப்பதிவு சட்டத்தில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு, திரைப்பட திருட்டு தடுப்பு சட்ட விதிகள் இயற்றப்படும்’ என்றார்.

நிதி பற்றாக்குறை 3.4 சதவீதமாக இருக்கும்:

2018-19 நிதியாண்டுக்கான திருத்திய மதிப்பீட்டின்படி நிதி பற்றாக்குறையும் 3.4 சதவீதமாக குறைந்திருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு வாயிலாக கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு முதலீ–்ட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 23,900 கோடி டாலர் ஈர்க்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக, தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கான பாதையை அமைத்திருக்கிறோம்.நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறைந்து வருகிறது. நடப்பு ஆண்டில் இந்த பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் நிதி பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 3.4 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பண வீக்கத்தை இந்த அரசு கட்டுப்படுத்தி இருக்காவிட்டால் ஒவ்வொரு குடும்பத்தின் தினசரி செலவு 35 முதல் 40 சதவீதம் அதிகரித்திருக்கும் என பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...