நமது ராணுவத்தை எதிர்க்கட்சியினர் அடிக்கடி அவமானப் படுத்துகிறார்கள்

இந்திய போர்விமானங்கள் பாகிஸ்தானின் பாலாகோட்டில் பயங்கர வாதிகளின் முகாம்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக மேலும் விவரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரியதற்காக காங்கிரஸ் கட்சியின் சாம்பித்ரோடா மீது இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்ற்சாட்டுகளைத் தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசும் எதிர்க்கட்சி தலைவர்களை நாட்டுமக்கள் மன்னிக்க மாட்டார்கள் என டுவிட்டரில் பிரதமர் நரேந்திரமோடி செய்தி விடுத்துள்ளார்.

ஏ என் ஐ செய்தி நிறுவனத்துக்கு சாம்பித்ரோடா அளித்த பேட்டி வெளியானதும் ட்விட்டர் மூலம் சரமாரியாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்கத் தொடங்கினார்.

பாகிஸ்தான் தேசியதின கொண்டாட்டத்துக்கு தகுந்த முன்னுரையாக காங்கிரஸ் தலைவருக்கு வழிகாட்டியாக விளங்கும் சாம்பிட்ரோடா காங்கிரஸ் சார்பாக கொண்டாட்டங்களை துவக்கி இருக்கிறார் .

இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்திய ராணுவத்தின் திறன்மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது .வெட்கக்கேடு என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.

மற்றொரு ட்விட்டர் செய்தியில் பிரதமர் மோடி கூறியது கூறியது வருமாறு

நமது ராணுவத்தை எதிர்க்கட்சியினர் அடிக்கடி அவமானப் படுத்துகிறார்கள் இந்திய குடிமக்களுக்கு நான் இப்பொழுது வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறேன்.

இந்திய ராணுவத்தின் திறனை அவமானப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் அவர்கள் கூறும் கருத்துகள் தொடர்பாக மக்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பவேண்டும்>

எதிர்க்கட்சித் தலைவர்களை அவர்களது அறிக்கைகளுக்காக 130 கோடி இந்தியர்கள் மன்னிக்க மாட்டார்கள். மறந்துவிடவும் மாட்டார்கள் .

இந்திய ராணுவத்துடன் இந்திய மக்கள் முழுமையாக ஒருங்கிணைந்து நிற்கிறார்கள் ,என மோடி தன்னுடைய டுவிட்டர்செய்தியில் குறிப்பிட்டார்

காங்கிரஸ் குடும்ப சாம்ராஜ்ஜியத்தின் விசுவாசமான குட்டிசமஸ்தான  தலைவராக விளங்கும் சாம்பித்ரோடா பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய படைகள் மேற்கொண்ட தாக்குதலை நம்பமுடியாது என்று எதிர்கருத்து வெளியிட்டுள்ளார். இது புதிய இந்தியா! பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு நாங்கள் அவர்கள் மொழியிலேயே அவர்கள் புரிந்துகொள்ளும் வழியில் வட்டியுடன் பதில் தருவோம். என்று மற்றொரு டுவிட்டர் செய்தியில் பிரதமர் மோடி பதில்கூறினார்.

ராம் கோபால் யாதவுக்கு பதிலடி

புல்வாமா தாக்குதல் குறித்து வியாழன் அன்று கேள்வி எழுப்பிய சமாஜ்வாடி கட்சிதலைவர் ராம்கோபால் யாதவையும் பிரதமர் நரேந்திர மோடி விட்டுவைக்கவில்லை.

ராம் கோபால்யாதவ குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தி விவரம்:

பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும் நமது ராணுவத்தின் செயல்கள்குறித்து கேள்வி எழுப்பியும் குறை கூறி வருவோரின் இயற்கையான கூடாரமாக எதிர்க்கட்சிகள் அமைந்துள்ளன.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால்ஜி யின் அறிக்கை கண்டனத்துக்குரியது. அவர் நமது ஜம்மு காஷ்மீரை பாதுகாக்க தங்கள் இன்னுயிரை தியாகம்செய்யும் ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துகிறார்.

தங்கள் உயிரை தியாகம்செயத தியாகிகளின் குடும்பத்துக்கு அவமானம் தேடிதருகிறார் என நரேந்திர மோடி தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

 

சாம் பித்ரோடாவின் பேட்டி குறித்து டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சில நிமிடங்களில் விளக்கம் ஒன்றை ஏ என் ஐ செய்தி நிறுவனம் மூலமாக சாம் பித்ரோடா வெளியிட்டார். இந்தியாவின் சாதாரணகுடிமக்களின் நானும் ஒருவன். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள எனக்கு உரிமை உள்ளது .காங்கிரஸ் கட்சியின் சார்பில் நான் இப்பொழுது பேசவில்லை. இந்தியாவின் சாதாரணக் குடிமகனாகவே நான் வினாக்களை எழுப்பினேன். அந்தக் கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்துகொள்ள எனக்கு உரிமை உள்ளது .இந்தஉரிமையின் அடிப்படையில் கேள்வி எழுப்பியதில் என்னதவறு என்று சாம் பித்ரோடா தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...