ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80…? தோராயமாக மூன்றரைக் கிலோ கடலைப் பருப்பு போட்டால் தான் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கும்…. ஒரு கிலோ கடலைப் பருப்பு சராசரியாக ரூ.45
ஆனால், 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கிறது….
அடுத்து பாருங்க, இரண்டரை கிலோ எள் போட்டால் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும். ஒரு கிலோ எள் ரூ.100 வரை விற்கிறது… இரண்டரைக் கிலோ எள்ளின் அடக்க விலையே ரூ.250… நல்லெண்ணெய் எப்படி 160 முதல் 220 வரை கிடைக்கிறது…?
இப்படி நாம் வாங்கும் மூலப்பொருட்களின் விலைக்கும்… கிடைக்கும் பொருட்கள் விலைக்கும் சம்பந்தமில்லமல் இருக்கிறதென்றால் என்ன அர்த்தம்?!… காரணம்… இங்கு விற்பனை செய்யும் எந்த பொருளும், ஒரிஜினல் கிடையாது… எல்லாம் கலப்படங்கள்…
எண்ணெய்களோ… தேவையான வாசனை எஸ்சென்ஸ் சேர்க்கப்பட்ட மினரல் ஆயில்தான்… மினரல் ஆயில் என்பது கச்சா எண்ணெயில் (க்ரூட் ஆயில்)இருந்து பெட்ரோலிய பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் தாரில் இருந்து பிரிக்கப்படும் நிறம், சுவை, வாசனை அற்ற ஒரு எண்ணெய்…
இதில் அந்தந்த எண்ணெயின் எசென்ஸ் சேர்த்து தான் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ரைஸ் பிராண்டு ஆயில், ஆலிவ் ஆயில், சன்பிளவர் ஆயில், கடலை எண்ணெய், என பல வகையான எண்ணெய்கள் பல வகையான பிராண்டுகளில் கிடைக்கிறது…
இதை பொருட்களை நாம் வாங்கி சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?… உஷார் நண்பர்களே!… இயற்கையைமீறுவதே அனைத்து பிரச்சினைகளுக்க ும் காரணம்…
இன்றைய பொருளியல் உலகில், நம் உடலியலை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்… நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை உள்ளே அனுப்பி விட்டு, அவற்றை வெளியேற்ற அரும்பாடு பட்டு கொண்டிருக்கிறோம்…
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
"நல்ல உணவே மருந்து… தவறான உணவே நோய்…"
உணவை சரி செய்தால் மட்டுமே உடலை சரி செய்ய முடியும்… "உடல் ஆரோக்கியம் தான் மன ஆரோக்கியம்…"
எனவே, அனைத்துக்கும் அடிப்படையான உணவை சரி செய்வோம்… இயற்கை வேளாண்மையில்விளைந்த நல்ல உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்…
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.