இனி இந்தியாயில் தாமரை வாடாது-

கேரளாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஊத்தி கொள்ளும் என்பதே தேர்தல் ரிசல்ட்டாக இருக்க முடியும். நிறைய திமுக இடது சாரி நண்பர்களுக்கு எக்சிட் போல்முடிவுகளை ஜீரணிக்க முடியவில்லை.6 மாதங்க ளுக்கு முன்பு தான் பிஜேபி மூன்று மாநிலங்க ளில் பிஜேபி தோல்வியடைந்தது இப்பொழுது
மட்டும் எப்படி பிஜேபி ஜெயிக்க முடியும்? என்றுகேள்வி கேட்கிறார் கள்.

அவர்களுக்கு என்னுடைய ஒரே பதில் மோடி என்பது தான்.இந்தியாவில் இப்பொழுது வலிமை வாய்ந்த ஒரேதலைவர் மோடி தான். அது மட்டும ல்ல.இப்பொழுது இந்தியா முழுவதும் செல்வா க்கு உள்ள ஒரே கட்சி பிஜேபி தான்.

இப்பொழுது உள்ள பிஜேபிக்கு சுதந்திரம் அடை ந்து40 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்கு இருந்தசெல்வாக்கு மாதிரி இருக்கிறது. 1989 க்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி உறுதிஎத்தனை தொகுதிகள் என்று ரிசல்ட் டில் பார்த்துகொள்வோம் என்கிற மன நிலையே மக்களிடம் இருந்து வந்தது.

எமர்ஜென்சி் மூலம் இந்தியாவை யே இந்திராமிரட்டி அடக்கி வைத்த தற்கு எதிராக எழுந்த எதிர்கட்சிகளின் ஒற்றுமையும் அதனால் விளை ந்த மொரார்ஜி தேசாயின் தலைமையும் அதனால் மக்களிடம் உருவான நம்பிக்கை யும் சுதந்திரா இந்தியாவில்நடைபெற்ற 6 வது லோக்சபா தேர்த லில் காங்கிரஸ் கட்சிக்கு முதன் முதலில் தோல்வி யை அளித்த பொழுதும் 189 தொகுதிகளில் கா ங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது.

அதே மாதிரி 1989 ல் போபர்ஸ் ஊழலை எதிர்த்துவிபி சிங் தலைமையில் எதிர் கட்சிகள் ஒன்றுதிரண்ட பொழுதும் காங்கிரஸ் தோல்வி யடைந்த து இருந்தாலும் 197 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. எனவே காங்கிரஸ் கட்சிக்குஎதிராக மக்களிடம் அலை வீசிய பொழுதும் 200 தொகுதிகளுக்கு குறைவில்லாமல் வெற்றிபெற்று வந்தது.

ஆனால் 1996 க்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு அதிக பட்ச வெற்றியே 2009 ல் கிடைத்த 206தொகுதிகள் தான். இதற்கு காரணம் வட மாநிலங்களில் பிஜேபி யின் வளர்ச்சி என்றே கூற வேண்டும். இனி காங்கிரஸ் கட்சி 200 இடங்களைபிடிக்க வேண்டும் என்றால் அதற்கு பிஜேபி மிகப்பெரிய அளவில் மக்களிடம் எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டும்.

டீமானிட்டிசேசன் ஜிஎஸ்டி என்று பிஜேபி ஆட்சி யில் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு மோடி மீதோ பிஜேபிமீதோவெறுப்புவரவில்லை .மாறாக நாட்டிற்க்கு மோடி நல்லதுதான் செய்கிறார் என்கிற நம்பிக்கை இருக்கிற துஇந்த நம்பிக்கை மோடியின் 2019 -2024 ஆட்சியி ல் மேலும் அதிகரிக்குமே தவிர நிச்சயமாக குறையாது.

அது மட்டுமல்ல மோடியின் 2019 -2024 ஆட்சி பிஜேபி யின் எதிர்ப்பாளர்களையும் பிஜேபி பக்கம் கொண்டு வரும் அளவிற்கு இருக்கும்என்பதால் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளைஎல்லாம் கனவில் கூட இனி நினைக்க முடியாது

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி முடிந்த அளவில்கூட்டணி வைத்து போட்டியிட்டது. பீகார் மகாரா ஸ்டிரா தமிழ்நாடு கர்நாடகா ஜார்கண்ட் ஒடிசா கேரளா உத்தரபிரதேச ம் ஜம்மு காஷ்மீர் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி வைத்து போட்டியிட்ட பொழுதும் காங்கிரஸ் கட்சியால் 50 தொகு தி களில் கூட வெற்றி பெற முடியவில்லை என்ப
தால் காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வரும் என்றுகனவு காண வேண்டாம்.

இனி வரும் காலங்களில் பிஜேபி மிக மோசமானஆட்சியை அளித்தாலும் அதற்கு 200 தொகுதிக ளுக்கு குறையாது என்பதால் பல மாநில கட்சிகளின் துணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும். ஆனால் பிஜேபி எவ்வளவு மோசமாகஆட்சி செய்தாலும் காங்கிரஸ் கட்சியால் 100 தொகுதிகளை எட்டிப் பிடிக்க பல குட்டிக் கரணம்போட வேண்டும்.

எனவே இனி வருகின்ற 2024 மற்றும் 2029 தேர்தல்களில் எந்த ஒரு சூழ்நிலையிலும் காங்கி ரஸ் 100 தொகுதிகளை கைப்பற்றவே கதற வேண்டும்.மாறாக பிஜேபி மிக மோசமான சூழ்நிலையிலும் 200 தொகுதிகளை எட்டி விடும்.என்பதால் இன்னும் இரண்டு தேர்தலுக்கு காங்கி ரஸ் ஆட்சியை பற்றி கனவு காண முடியாது.

இருந்தாலும் பிஜேபியின் அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி இந்தியாவின் பொற்கால ஆட்சியாக இரு க்கும் என்பதால் அடுத்த 2024 லோக்சபா தேர்தலி ல் எந்தவொரு கூட்டணி யின் துணை யின்றியே தேர்தலில் போட்டியிட்டு மெஜாரிட்டி யோடு வெ ற்றி பெறுகிற அளவிற்கு உயர்ந்து நிற்கும்.

மோடி அமித்ஷா இருவரும் தமிழ்நாடு ஆந்திராகேரளா தெலுங்கானா பஞ்சாப் இந்த 5 மாநிலங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் பிஜேபி யை ஓரளவிற்கு வளர்த்து விடுவார்கள் என்பதால் இனி இந்தியாவில் தாமரை வாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...