பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றிகிடைத்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்தது.
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றிகிடைத்தது. ராகுலும், பிரியங்காவும் மோடியை மிகமிக மோசமாக விமர்சித்து பேசி பிரசாரம் செய்தும்கூட காங்கிரஸ் கட்சிக்கு 2014-ம் ஆண்டு தேர்தலை விட தற்போது 8 இடங்கள் மட்டுமே கூடுதலாக கிடைத்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து 2-வது தடவையாக பறிபோய் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 சதவீதம் இடங்கள் அதாவது 55 இடங்களை பெற்றால் தான் ஒருகட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியும். காங்கிரஸ் கட்சிக்கு அந்த இடத்தைப் பெற தற்போது 3 எம்.பி.க்கள் குறைவாக உள்ளனர். இது ராகுலை கடும்விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல் ஓரிரு எம்.பி.க்களை வைத்திருக்கும் சிறியகட்சிகளை காங்கிரசுடன் இணைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிடலாம் என்று ஓசையின்றி முயற்சிசெய்தார். ஆனால் எந்த கட்சியும் காங்கிரசுடன் இணைய மறுத்து விட்டன.
இதனால் மக்களவை காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கவும் ராகுல் தயங்குகிறார். இந்தநிலையில் நேற்று பாராளுமன்றம் முன்பு பேசிய பிரதமர் மோடி, “பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க் கட்சிகளின் குரலுக்கு மரியாதை உண்டு. எனவே எண்ணிக்கை பற்றி கவலைப் படாமல் எதிர்க் கட்சிகள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என்றார்.
பிரதமர் மோடி பேச்சால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப் படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதற்கான அறிவிப்பை ஆவலுடன் எதிர் பார்த்தனர்.
ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் இந்தவிஷயத்தில் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் சலுகை காட்டக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளனர். அதன்படி காங்கிரசுக்கு எதிர்க் கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்காது என்று பா.ஜனதா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |