சிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல!

தேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு
நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட
தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்!

இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை  ஆரோக்கியமாக வைத்திருந்தால் இரண்டாம்கட்ட தலைவர்கள் உருவாக காரணமாக அமைந்துவிடும். அந்த தலைவர்களில் ஒருவர் தேசிய தலைமைக்கு சவாலாக வர வாய்ப்பும் இருக்கிறது!

நேரு குடும்பவாரிசு இல்லாமல் கூடகாங்கிரஸ் கட்சியால் இயங்க முடியும் என்ற
சூழ்நிலைகூட தோன்றிவிடலாம் . அப்படி ஒரு இக்கட்டான தருணம் வந்து விட்டக் கூடாது
என்ற அக்கறையால் கட்சியின் பெயரை மட்டும்  வைத்துக்கொண்டு அதன் அடிப்படைகளை சிதைத்தது.

சொந்த செல்வாக்கைக் கொண்டு தங்கள் தொகுதிகளில்கூட வெற்றிபெற முடியாதவர்களை
தேசிய அளவிலும் மாநிலங்களிலும் இரண்டாம்கட்ட தலைவர்களாக வைத்துக்கொண்டது.
மாநில கட்சிகளின் பலவீனங்களை பயன்படுத்தி கூட்டணி மூலமே  மத்தியில் ஆட்சியில் தொடரும் உத்தியைகையாண்டது!

கட்சி கட்டமைப்புக்கு பதிலாக வலிமைகொண்ட பல ஆதரவு வட்டாரங்களை வளர்த்துக்கொண்டது. அந்த வட்டாரங்களின் பட்டியல் நீளமானது!. *விசுவாசமான அதிகார வர்க்கம்!

*ஊடக முதலாளிகள் மற்றும் ஊடக பிரமுகர்கள்!

*வளைந்து கொடுக்கும் நீதித்துறை!

*அறிவுஜீவிகள் என்று
முத்திரை குத்தப்பட்ட அடிமைகள்!

*அரசின் நிதி உதவியை பெறும்
தொண்டு நிறுவனங்கள்!

*சோசலிசத்தின் பெயரால் தங்களை
தியாக சீலர்களாக காட்டிக் கொள்ளும்
இடதுசாரி ஆதரவாளர்கள்.!

*மதச்சார்பின்மை வேடம் அணிந்த
போலி ஜனநாயகவாதிகள்!

*மேற்கத்திய இதயமும் இந்திய
உடலும் கொண்ட பொருளாதார தற்குறிகள் !

*வரலாற்று ஆசிரியர்கள் & ஆய்வாளர்கள்
என்ற பெயரில் இயங்கிய முழு மூடர்கள்!

*கல்வியாளர்கள், அறிஞர்கள் என்று
பட்டியலிடப்பட்ட பெருச்சாளிகள்!

*முதலாளித்துவ முதலாளிகள்!

*வெளிநாட்டு ஆயுத உற்பத்தியாளர்கள்!

* வெளிநாட்டு ஆட்சித் தலைமைகள்….. என்றுநீண்டு விரிந்து பரந்து பட்ட ஆதரவு வட்டாரங்களைக் கொண்டுகாங்கிரஸ் கட்சி என்கிற கோட்டைபுதிதாக வடிவமைக்கப்பட்டது!

இந்த ஜாம்பவான்கள் காங்கிரஸ் கட்சியின் மேன்மைகருதி இணைந்தவர்கள் அல்ல!

தனிமனித தேவைகள்! தனிமனித பேராசைகள்! தனிமனித சுயநலங்கள்! இவர்களின் ஆதரவுக்கு
காரணமாக இருந்தது!

அந்த தேவைகளை நிறைவு செய்வது காங்கிரஸ் தலைமையின் வள்ளல் தன்மையாக இருந்தது! மக்களின் ஆதரவை பெற முடியாத தலைவர்கள் காங்கிரஸ் கட்சி என்கிற மாபெரும் கோட்டையின் அடிக்கற்களாக அமைத்தார்கள்!. மற்றவர்கள் சுற்றுச் சுவர்களாகவும் கூரையாகவும் அமைத்தார்கள்!.

தேர்தல் ஜனநாயக அரசியலின் கூறுகள் நிர்வாகத்தின கூறுகளுக்கு கட்டுப்பட்ட இரண்டாம் நிலை
புனிதங்களாக மாற்றம் அடைந்து விட்டன!. ஆனாலும் , இந்திய ஜனநாயகம் உலகின் உதாரணம் என்ற மாய பிம்பம் கட்டமைக்கப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தும் பட்டது!

நாடு அடைந்த நன்மைகள் அனைத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமையை
காரணமாக காட்டப்பட்டது! தாழ்வுகளுக்கெல்லாம் மக்களே காரணம் என்ற தாழ்வு மனப்பான்மை
வளர்க்கப்பட்டது!

ஒட்டுமொத்த சூழலும்  ஒற்றைப் புள்ளியியல் அடக்கம் செய்யப்பட்டது! காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எந்த கட்சியாலும் ஆள முடியாத அளவுக்கு சிக்கல்கள் நிறைந்த நாடு இந்தியா!
நேருகுடும்பத்தினர் தவிர வேறு எந்தவொரு தலைமையாலும் நிர்வகிக்க முடியாதநாடு இந்தியா
என்ற மாயத் தோற்றத்தை கற்பிக்க இந்தபெரும்படை வெற்றிகரமாக பயன்படுத்தப் பட்டு வந்தது!

2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகால மன்மோகன்சிங் ஆட்சியில் இரண்டு முறை நிதி அமைச்சராகவும் இடைப்பட்ட காலத்தில் உள்துறை அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம்
காங்கிரஸ் கட்சி என்கிற கோட்டையின் ஆதார அடிக்கற்களில் முக்கியமான கல்லாக
வடிவெடுத்தார்!

இப்போது அந்த ஆதார அடிக்கலை பிடுங்கி எறியும் முயற்சியின் தொடக்கம் மட்டுமே INXMedia வழக்கு! ஒரு பெரிய கட்டிடத்தைதகர்க்க முதலில் ஒரு கல்லை பெயர்த்து எடுக்க வேண்டும்!. ஆனால் அது தான் கடினமானது!. சவாலானது! ஒரு கல்லை பெயர்த்து எடுத்து விட்டால்
மற்ற கற்களை வெறுமனே தட்டினால் போதும் உதிர்ந்து விழும்!. ப.சிதம்பரம் என்கிற வலிமையான  அடிக்கல்லை மொத்தமாக பெயர்த்து எடுக்க இனி ஏராளமான வழக்குகள் வரலாம்!

2014 முதல் 2019 வரையிலான மோடியின் ஐந்து ஆண்டுகளில் இது ஏன் சாத்தியம் ஆகவில்லை?. 2014 ல் மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் பெற்ற வெற்றியை
ஒரு முறை நிகழ்ந்த அதிசயம் என்று காங்கிரஸ்கோட்டையின் அங்கங்களாக திகழும் அனைத்து
பிரிவினரும் மனதார நம்பினார்கள்! அதனால் , மோடிக்கு அரசியல் அமைப்புச்சட்டம்
அளித்து இருந்த அதிகாரத்தை  ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்க முயன்றார்கள்!

2019 பாராளுமன்றத் தேர்தல்முடிவுகள் வேறு உண்மையை உணர்த்தியது! பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்தவெற்றி ஒரு அரசியல்கட்சிக்கான வெற்றி அல்ல ; நாட்டின் பெரும்பான்மை சமுதாயம்
தனக்கான ஆட்சியை தேர்வுசெய்ய முடிவு செய்துவிட்டது .அந்த முடிவுக்கு ஏற்ற கட்சியாக
பாரதிய ஜனதா இருந்தது !

ஒருஅரசியல் கட்சியின் வெற்றி தோல்விகள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் மாறக்கூடும்!
ஆனால் ஒரு சமுதாயத்தில் எழுந்து இருக்கும் எழுச்சி வடிய நீண்ட காலம் தேவைப்படும்!

2019 தேர்தல் முடிவுகள் மோடி எதிர்ப்பாளர்களுக்கு இந்தயதார்த்த நிலையை புரியவைத்து விட்டது!, அதனால்தான் பல அமைப்புகளிலும் மாற்றங்கள் தென்படத்துவங்கி இருக்கிறது!

மோடி எதிர்ப்பாளர்களில் சித்தாந்த ரீதியாக கொள்கை ரீதியாக கோட்பாடு ரீதியாக உறுதியாக நின்று எதிர்ப்பவர்கள் எத்தனைபேர்? மொத்த எதிர்ப்பாளர்களில்  ஒருசதவீதம் இருந்தால் அதிகம்!

மற்ற மோடி எதிர்ப்பாளர்களும் காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவாளர்களும் சராசரி மனித
சபலங்களுக்கு உட்பட்டவர்கள் தான்.தங்களை காப்பாற்றிக்கொள்ள எதையும் தியாகம் செய்யத்துணியும் சாதாரண மனிதர்கள்தான்.

2024 ம் ஆண்டு தான் அடுத்த தேர்தல்.அப்போது இவர்களின்வயது கூடிவிடும்.2024 ல் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புகள் பற்றிய கணிப்புகள் இப்போது
முக்கியத்துவம் வாய்ந்ததல்ல!

ஆனால், 2024 லும் கூட காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை ஆட்சிக்குவரும் வாய்ப்பு
மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது!இது தான் சோர்வுதரும் -சமரசத்திற்குஆட்படுத்தும் –
சஞ்சலங்கள் உட்படுத்தும் அச்சம்!

2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த மாபெரும் தோல்வியைவிட ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்துவிலகியதும் அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில்
நிலவும் வரலாறு காணாத குழப்பங்களும் விபரீத விளைவுகளை உண்டாக்கி இருக்கிறது!

2024 தேர்தலுக்குமுன் காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக சிதைக்கப் படுமானால் அதில் ஆளும் கட்சியின்பங்கு — 50 சதவீதம்! காங்கிரஸ் தலைமையின் பங்கு–50 சதவீதம்!

 வசந்தன் பெருமாள்!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...