மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ‘ ஐந்தாண்டு காலமும் அமளியும் சபை முடக்கமும் தவிர வேறு ஏதாவது நடக்கும் என்று நம்பிக்கை வரவில்லை . ஆளும் கட்சியான பாஜகவின் மென்மையான அணுகுமுறை இன்றைய அரசியலுக்கு சரிப்படாது ‘ என எழுதியிருந்தேன். அப்படித்தான் நடக்கிறது என்பதில் மகிழ்ச்சி இல்லை.
சபையை செயல்பட விடாமல் தடுப்பதே தங்கள் வெற்றி என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதால் , அதானி, அம்பேத்கர் என்று ஏதாவது ஒன்றை வைத்துக் கொண்டு மத்திய அரசை இயங்க விடாமல் செய்கின்றன. தினமும் ஏதாவது ஒரு விஷயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தே எதிர்க் கட்சிகள் காத்திருக்கின்றன.
ஆளும் தரப்பின் வாயிலிருந்து என்ன வார்த்தை வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு சபையை முடக்கச் செய்ய முடியும்.
அம்பேத்கர் பற்றி அமித்ஷா தவறாகவோ தரம் குறைத்தோ எதுவும் சொல்லவில்லை. திரும்பத் திரும்ப அம்பேத்கர் பெயரைக் கூறுவதால் அரசியல் ஆதாயம் பெற முடியாது என்ற கருத்தைத்தான் அவர் வெளிப்படுத்தினார். ஆனால், அதை எளிதாக விட்டு விடுவதில் எதிர்க்கட்சிகளுக்கு விருப்பம் இல்லை. சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது ஆளும் கட்சியை எரிச்சலூட்டும் யுக்தி.
கடவுள் நாமத்தை உச்சரிப்பது போல அம்பேத்கர் பெயரை உச்சரிக்கிறீர்கள்- என்பதில் இழிவுபடுத்தலோ அவமதித்தலோ எங்கே வருகிறது? அம்பேத்கர் தலைவர் அல்ல என்று கூறியிருந்தால் தவறு. அவர் மேதை அல்ல என்று குறிப்பிட்டிருந்தாலும் சரியல்ல. அவர் கடவுள் அல்ல என்ற கருத்தில் என்ன குற்றம் இருக்கிறது?
ஒன்றுமில்லாத ஒரு பேச்சை பெரிது படுத்தித்தான் இத்தனை ரகளை, இவ்வளவு மோதல் நடத்தி, கை கலப்பு வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது.’அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை ‘ என்று ஒரு வரியில் சொல்லி முடித்திருக்க வேண்டிய விவகாரத்தை இவ்வளவு தூரத்துக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் வீண், எவ்வளவு அரசுப் பணம் விரயமாகி வருகிறது என்ற கவலை யாருக்கும் இல்லை.
ஆட்சிக்கு வர முடியவில்லையே என்ற எதிர்க் கட்சிகளின் விரக்தியைத் தவிர, இந்த ரகளைக்கு வேறு காரணம் இருக்கும் என்று தோன்றவில்லை.
கோடிக்கணக்கில் செலவிட்டு எம்பி.க்களாக தேர்வாகிறவர்களின் நடத்தை சராசரி மனிதர்களுக்கு நிகராகக் கூட இல்லாமல் இருந்தால் எப்படி?
இதைப்பற்றி கொஞ்சமாவது சிந்திக்க வேண்டிய அவசியம் மக்களுக்கு இருக்கிறது.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |