மகாராஷ்டிராவில் எந்த அரசியல் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்காது என கட்சியின் தேசிய தலைவர் ஜேபி. நட்டா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர், அடுத்த தேர்தல்களில் பாஜக தனித்தும், பிறகட்சிகள் ஓரணியிலும் போட்டியிடும் என்றார். அடுத்த தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக மாபெரும் வெற்றிபெறும் என்று கூறிய நட்டா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி நம்பகத்தகாத, இயற்கைக்கு மாறான கூட்டணி என்றும், மராத்தியபேரரசர் சிவாஜியையும், வீர சவார்க்கரையும் அவமதிக்கும் சம்பவங்கள் அதிகரித்த போதிலும், அதை காணாதது போல முதலமைச்சர் உத்தவ்தாக்கரே இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
சித்தாந்த விவகாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப பாஜக நிலைப் பாட்டை மாற்றியதில்லை எனவும், திருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை எனவும் நட்டா கூறினார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |