மோடி சிறந்தமனிதர். மக்களால் விரும்பப்படுபவர்

தெற்கு கரோலினா நகரில் நடந்தகூட்டம் ஒன்றில் டிரம்ப் பேசியதாவது: சமீபத்தில் இந்தியாவில் பிரதமர் மோடியுடன் கூட்டத்தில் பங்கேற்றேன். பிரதமர் மோடி சிறந்தமனிதர். மக்களால் விரும்பப்படுபவர். அதேபோல், அமெரிக்கா மீதும், அமெரிக்கர்கள் மீதும் அன்பு கொண்டுள்ளனர். இந்தியாவில், உண்மையில், 129,000 பேர் என்னை பார்க்கவந்தனர். அதை நீங்கள் பார்த்தீர்களா? அந்த இடம் முழுவதும் நிரம்பியிருந்தது. இதன்மூலம் ஒருலட்சம் மக்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன். அது பெரிய கூட்டம். இந்தகூட்டத்தை பார்த்து எங்களுக்கு ஒரேநெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், போய்வந்த பிறகு, இங்கே கூட்டத்தை பார்த்தேன். பொதுவாக நான்பேசும் கூட்டத்தை பற்றிசொன்னால், அங்கு ஒப்பிடும் போது எனக்கு பெரிய கூட்டம் வருவது கிடையாது.

ஒருகூட்டத்திற்கு 140 அல்லது 50 அல்லது 50 ஆயிரம் பேர்தான் அதிகபட்சமாக வருகின்றனர். இந்தியா சென்று வந்தபிறகு அதுபோன்ற ஒருமக்கள் கூட்டத்தை இனி பார்க்கபோவது இல்லை. இந்தியாவில் 150 கோடி பேர் உள்ளனர். நான் இந்தகூட்டத்தை நேசிக்கிறேன். அந்த கூட்டத்தையும் நேசிக்கிறேன். இந்தியாவில் சிறந்த தலைவர் உள்ளார். இந்த நாட்டின் மீதும் அந்நாட்டு மக்கள் அன்பு செலுத்துகின்றனர். இந்தியபயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...