தமிழக பா.ஜ., தலைவராக எல்.முருகன் நியமிக்கப் பட்டுள்ளதாக, கட்சியின் தேசிய தலைவர் நட்டா அறிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை சவுந்திர ராஜன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அது முதல், அந்த பதவி காலியாக இருந்தது. அதனைதொடர்ந்து, இந்தபதவிக்கு சிலரின் பெயர்கள் அடிபட்டன.
இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவராக எல்.முருகனை நியமித்து, கட்சி தேசியதலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். முருகன் தற்போது, தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார்.
நாமக்கல்லை சேர்ந்த முருகன், சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டபல்கலையில், இளநிலை சட்டப்படிப்பும், சென்னை பல்கலையில், முதுகலை சட்டப்படிப்பும் படித்துள்ளார். சென்னை பல்கலையில், மனிதஉரிமைகள் சட்டம் குறித்து பி.எச்டி படித்து வருகிறார்.15 வருட வழக்கறிஞர் அனுபவம் கொண்ட இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |