ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு( ஜே.பி.சி.,) தலைவராக பா.ஜ., எம்.பி.,யும் முன்னாள் மத்திய அமைச்சருமான பி.பி. சவுத்ரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் டிச., 17 ல் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப லோக்சபா எம்.பி.,க்கள் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பான இரு மசோதாவை ஆய்வு செய்வதற்கான ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் இடம்பெறும் லோக்சபாவை சேர்ந்த எம்.பி.,க்கள் பெயர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
பா.ஜ., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிபி சவுத்ரி, அனுராக் தாக்கூர், எம்.பி.,க்கள் பர்ஷோத்தம்பாய் ரூபாலா, பன்சுரி சுவராஜ், சம்பித் பத்ரா, சி.எம்.ரமேஷ், விஷ்ணு தயால் ராம், பரத்ருஹரி மஹ்தாப், அனில் பலூனி, விஷணு தத் சர்மா, பைஜெயந்த் பன்டா,சஞ்சய் ஜெயிஸ்வால்
தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ., எம்.பி.,யுமான பி.பி.சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2017- 19 காலகட்டத்தில் கார்பரேட் விவகாரம், சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பதவி வகித்து வந்தார். இவர் வெளியுறவு குழுவுக்கான தலைவராகவும், தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான கூட்டு குழு தலைவராகவும் பதவி வகித்து உள்ளார்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |