ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகிய ஜோதிராதித்ய சிந்தியா புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்தார்.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காததால், அதிருப்தி காரணமாக கட்சியில்இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா 4 முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று ஜோதிராதித்ய சிந்தியா விலகியதை அடுத்து, அவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்கள் தங்கள்பதவியை ராஜிநாமா செய்தனர். இதனால் மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமா்ந்துள்ள காங்கிரஸுக்கு 15 மாதங்களிலேயே நெருக்கடி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காலியாக உள்ள இரு இடங்கள் தவிா்த்து, மொத்த உறுப்பினா்களின் பலம் 228 ஆகும். 22 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததை அடுத்து, பேரவையின் பலம் 206-ஆக உள்ளது. தற்போதைய நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க 104 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸுக்கு ஆதரவாக 99 உறுப்பினா்களே (கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் உள்பட) உள்ளனா். ஆனால் பாஜகவிடம் 107 உறுப்பினா்கள் உள்ளனா்.

பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மத்திய அமைச்சா்பதவி வழங்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

மத்தியப்பிரதேச காங்கிரஸில் தன்னை ஒதுக்கும் விதமாக முதல்வா் கமல்நாத் மற்றும் மூத்த தலைவா் திக்விஜய்சிங் ஆகியோா் இணைந்து செயல்படுவதாக ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகினார். மத்தியப் பிரதேசத்தில் வரும் 26-ஆம் தேதி 3 இடங்களுக்கான மாநிலங்களவை தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலா ஒருஇடத்தில் வெற்றி உறுதியாக உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நகா்வுகளால் 3-ஆவது இடத்தையும் பாஜக கைப்பற்றலாம் எனத் தெரிகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...