உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ரத்த செல்களில் ) உள்ள ஹீமோகுளோபின் அளவு குறையும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்தசோகை ஏற்பட பல காரணங்கள் இருப்பினும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள், இரும்புசத்து குறைப்பாட்டினால் ஏற்படும் அனீமியா வால்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
ரத்தசோகை வராமல் தவிர்க்க நாம் சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும் குறிப்பாக இரும்பு சத்து நிறைந்த உணவுகளான தினசரி கர்ப்பிணி பெண்களும் அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, புதினா, அவல், கடலைப்பருப்பு, பூசணி விதை, உலர் பழங்கள் சோயா, பயிர் வகைகள், நண்டு, ஆட்டுஈரல் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் இருமுறையாவது கீரை,காகறி, பழங்கள் கொடுக்கப்படவேண்டும்.
மேலும் நாம் உண்ணும் இரும்பு சத்துகள் உடலில் சேர வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்கா, கொயா, முருங்கை கீரை, தக்காளி, முட்டைகோஸ் முளைக்கட்டிய பயிறுகள் ஆகியவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளல் அவசியம்.
சைவ உணவைவிட அசைவ உணவில் உள்ள இரும்பு சத்து உடலில் நன்கு சேரும். எனவே சைவ உணவை உண்பவர்கள் அதை ஈடு செயவேண்டியது அவசியம். தேவையான அளவு புரதமும், வைட்டமின் பி6, பி12 மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்து கொள்ளுதல் அவசியம்.
இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது கால்சியம் நிறைந்த உணவுகளையும் டீ,காபி போன்ற பானங்களையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்வகை உணவுகள் இரும்புச்சத்து உடலில் சேராமல் தடுத்துவிடும்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.