பாஜக எம்எல்ஏக்களை சட்ட சபையில் அமர்த்துவதை நோக்கியதே என் பயணம்

தேர்தலில் வெற்றிபெற்று பாஜக எம்எல்ஏக்கள் வரும் சட்டப்பேரவையில் இடம்பெறுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகபாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன் இன்று சென்னை வந்தார். அவருக்கு மிகவும் பிரமாண்டமான வரவேற்பு பாஜக தொண்டர்களால் வழங்கப்பட்டது. பின்னர்  சென்னை தி.நகரில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியதாவது:

பாஜக மூத்த தலைவர்களின் ஆதரவோடு வழிகாட்டு தலோடு இந்த இடத்தில் அமர்ந்துள்ளேன்.

வரும்தேர்தலில் வெற்றிபெற்று பாஜக எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையில் இடம் பெறுவார்கள். அதை நோக்கியதாகவே எனதுபயணம் இருக்கும்.

மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டுசெல்வோம்; தமிழக நலன், தமிழர்கள் நலனை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் .

பாஜகவில் தற்போது இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் அதிகளவில் இணைந்து வருகிறார்கள். அவர்களோடு இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறேன்.

சிஏஏ உள்ளிட்ட மத்தியஅரசின் திட்டங்களுக்கு எதிராக நடைபெறும்  தவறான பிரசாரங்களுக்கு பதிலாக, வரும் 20-ஆம் தேதி முதல் அடுத்தமாதம் 5-ஆம் தேதி வரை “உண்மையைச் சொல்வோம்; உரக்கச் சொல்வோம்’ என்னும் பரப்புரை பயணத்தை எல்லா கிராமங்களிலும் மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...