1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரணம்

கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.

இந்த பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின்கீழ் நேரடி பணப் பரிமாற்றங்களும் உண்டாம். அதோடு ஒவ்வொரு சுகாதாரத்துறை பணியாளருக்கும் (Health workers) 50 லட்சம் ரூபாய் வரைக்குமான மருத்துவ இன்சூரன்ஸ் வழங்ககிறார்கள் .

சுமார் 80 கோடி மக்கள் இந்த பிரதான்மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் வருவார்களாம். இந்ததிட்டத்தின் கீழ் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்க இருக்கிறார்கள். இது வழக்கமாக வழங்கப்படும் ரேஷன்பொருட்கள் இல்லாமல் கூடுதலாக வழங்கப்படுவது.

இதுபோக பிரதான் மந்திரி கரீப்கல்யான் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ஏதாவது ஒருவகை பருப்பும் ஒரு கிலோ, அடுத்த 3 மாதங்களுக்கு கிடைக்கும். இவைகளை இரண்டு தவணைகளாக திட்டத்தின்கீழ் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் முதுகு எலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான்திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது முதல்தவணையை கொடுக்க படுகிறது.  இதனால் சுமாராக 8.69 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இருக்கும் இருக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு அரசுவழங்கும் கூலியை உயர்த்தி இருக்கிறார்கள் . இதனால் இந்த திட்டத்தின்கீழ் வேலைசெய்யும் ஒருநபரின் வருமானம் 2000 ரூபாய் வரை அதிகரிக்கும்.

அரெசே நேரடியாக பணத்தை பரிமாற்றம்செய்யும் வேலை 8 பாகங்களாக நடைபெறும் எனச்சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர். விவசாயிகள், ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் இருப்பவர்கள், விதவைகள், ஏழை பென்ஷன்தாரர்கள், திவ்யாங் (மாற்றுத் திறனாளிகள்), ஜன் தன் திட்டத்தின் கீழ் இருக்கும் பெண்கள், உஜ்வாலா திட்டத்தின்கீழ் இருக்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தினர்கள்,

சுய உதவி குழுவினர்கள், EPFO கீழ் இருக்கும் அமைப்பு சார்ந்ததொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள்.வயதான ஏழை எளிய குடிமக்கள், தங்கள் கணவர்களை இழந்த விதவைபெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் (திவ்யாங்க் ஹிந்தியில் ) அடுத்த மூன்று மாதங்களுக்கு 1,000 ரூபாய் பெறுவார்கள் .

இந்தியாவில் வறுமை கோட்டுக்குக்கீழ் வாழும் 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக எல் பி ஜி கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்க இருக்கிறார்களாம்.

அதோடு இந்தியா முழுமைக்கும் இருக்கும், 63 லட்சம் பெண்கள் சுய உதவிக் குழுவுக்கு இதுவரை சொத்துபத்துக்கள் மற்றும் வங்கியில் பிணை இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன்வழங்கி வந்தார்கள். இனி 20 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்க இருக்கிறார்களாம்.

சம்பளத்தில் பிடித்தம்செய்யப்படும் 12 % பி எஃப் (ஊழியர் பங்கு + முதலாளி பங்கு) இரண்டுமே அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்பம். இந்த அறிவிப்பு எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தாது. 100 ஊழியர்களுக்குகீழ் இருக்கும் கம்பெனிகளில், 90 சதவிகிதம் ஊழியர்கள் மாதம் 15,000 ரூபாய்க்குகீழ் சம்பளம் வாங்குபவர்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்குத்தான் பி எஃப் தொகையை மத்திய அரசு வழங்கும்.

கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு என்று தனிநிதி இருக்கிறது. அந்தநிதியின் பெயர் Buildings and Other Construction Workers’ Fund. அந்த நிதியை கொடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி இருக்கிறது.

அதேபோல கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ பரிசோதனை, மருத்துவ மையங்கள் போன்ற மருத்துவ செலவுகளுக்கு, மாவட்ட மினரல்நிதியில் (District Mineral Fund) இருந்து செலவழித்து கொள்ளலாம் என சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...