கொரோனா பாதிப்பு இந்தியாவில் 7000ஐ நெருங்கி விட்டது. 220 பேர் பலியாகி யுள்ளனர். கடந்த ஒருவாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை மளமளவென உயர்ந்து விட்டது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் தீவிரமாக உள்ளது,
கொரோனாவை தடுக்க தனிமை படுதலும் சமூகவிலகலுமே சிறந்த வழி என்பதால் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும்நிலையில் அடுத்த ஒருசில வாரங்கள் மிக முக்கியமானவை. எனவே ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோச னைகள் நடந்துவருகின்றன.
இது குறித்து பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர் களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஒடிசாவில் ஏற்கனவே ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுவிட்டது. தமிழ்நாட்டிலும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு நியமித்த 19 மருத்துவர்கள் அடங்கியகுழு முதல்வர் பழனிசாமியிடம் பரிந்துரைத்துள்ளது.
கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துபேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கொரோனாவை ஒழிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. கொரோனாவை தடுக்க இன்னும் 3 வாரங்கள் தேவை என பல்வேறு மாநிலங்களில் இருந்து தகவல்வந்துள்ளது. சமூகவிலகல் என்பது கொரோனாவிற்கு சமூக தடுப்பு மருந்து என்று தெரிவித்துள்ளார்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |