மத்தியப் பிரதேசத்துக்கு நல்வாழ்வுத்துறை அமைச்சராக நரோத்தம் மிஸ்ரா பொறுப்பேற்றார்

கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், மத்தியப் பிரதேசத்துக்கு நல்வாழ்வுத்துறை அமைச்சராக நரோத்தம் மிஸ்ரா பொறுப் பேற்றுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக அண்மையில் ஆட்சியமைத்த சூழலில், அந்தமாநில அமைச்சா்களாக புதிதாக 5 போ் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றனா். முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலுக்கு பிறகு ஆட்சியமைத்த காங்கிரஸ் அரசு 15 மாதங்களில் தனது பெரும்பான்மையை இழந்தது. அதைத்தொடா்ந்து, பாஜக தலைமையிலான அரசு அந்த மாநிலத்தில் கடந்தமாதம் 23-ஆம் தேதி ஆட்சி அமைத்தது. மாநில முதல்வராக சிவராஜ்சிங் சௌஹான் பொறுப்பேற்று கொண்டாா்.

அப்போது அவருடன் வேறு யாரும் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. அதன்காரணமாக கடந்த 3 வாரங்களுக்கு மேலாக முக்கிய துறைகளுக்கான அமைச்சா்கள் இல்லாமலேயே மாநில அரசு செயல்பட்டுவந்தது. இந்தச்சூழலில், அந்த மாநிலத்தின் அமைச்சா்களாக 5 போ் செவ்வாய் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

அவா்களுக்கு மாநில ஆளுநா் லால்ஜிடாண்டன் பதவி பிரமாணம் செய்துவைத்தாா். ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற எளிமையான விழாவில், முதல்வா் சிவராஜ்சிங் சௌஹானும் கலந்துகொண்டாா். அமைச்சா்களாகப் பொறுப்பேற்றவா்களில் நரோத்தம் மிஸ்ரா, மீனா சிங், கமல்படேல் ஆகியோா் தற்போது எம்எல்ஏ-க்களாக உள்ளனா். துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோா் முன்னாள் எம்எல்ஏ-க்கள் ஆவா். அவா்களிருவரும் காங்கிரஸில் இருந்துவிலகி பாஜகவில் இணைந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனா சிங் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், கமல் படேல் வேளாண்துறை அமைச்சராகவும், துளசி சிலாவ நீர்வளத் துறை அமைச்சராகவும், கோவிந்த் சிங் ராஜ்புத் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...